பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

எல்லாவற்றிற்கும் இலக்கியச் சொல்லைத் தேடி ஒட வேண்டியதில்லை. அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சாதாரணச் சொற்களையே பயன்படுத்தி அறிவியல் செய்திகளை நுட்பமாக விளக்க முடியும். சான்றாக,

    Jagges  : பிசிறுகள்
    Pad  : திண்டு
    Glarefilter : கூசொளி வடிகட்டி

கலைச் சொல்லாக்கத்துக்கான வேர்ச்சொற்கள் வேண்டிய அளவுக்கு இலக்கிய நூல்களிலும் அன்றாட பேச்சு வழக்குச் சொற்களிலும் கிடைக்கின்றன. அவற்றைப் புதிய பகுதி, விகுதிகளோடு உருவாக்கினால் பொருளாழமிக்க சொற்களாக உருவாக்க இயலும்.

    Quantum  : துளியம்
    Terminal  : முனையம்
    Bit  : துண்மி
    Robot  : எந்திரன்

தெளிவுக்காக இரு சிறு சொற்களை இணைத்துப் புதுச் சொல்லாக்கிப் பொருள் விளக்கம் பெறலாம். சான்றாக,

    Antenna  : அலைவாங்கி
    Virus  : நச்சுநிரல்
    Audio  : கேட்பொலி

கூடுமானவரை ஆங்கிலத்திலிருந்து சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆங்கிலச் சொல் உணர்த்தும் பொருளை நுட்பமாகப் புரிந்து கொண்டு, அதனைத் திட்பமாக உணர்த்தும் சொற்களைக் கொண்டு சொல்ல முற்படவேண்டும். சான்றாக,

    Handset  : ஒலியுறுப்பு
    Cold fault  : உடன்தெரியும் பிழை
    Creet  : விளங்கா மொழி
    FemaleConnector : துளை இணைப்பி
    Gun  : வீச்சுப்பொறி

ஒரு கணினிச் சொல் தனியாக வரும் போதும் சொல் தொடருடன் இணைந்து வரும்போதும் சொல் மாறாமல் இடம் பெறச் செய்வதன்மூலம் பொருள் தெளிவை அளிக்க முடியும். சான்றாக,