பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

superScalar

1399

supervisor


லாக்கம் (pipelining) எனப்படுகிறது. கொணர்தல், குறிவிலக்கல், இயக்குதல், திரும்பி எழுதல் போன்ற நுண்செயலிச் செயல்பாடுகள் சிறுசிறு கூறாகப் பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் நுண்செயலி வாளா இருக்கும் நேரம் குறைந்து அதன் செயல்திறன் அதிகரிக்கிறது.

superscalar : மீப்பெரும் அடுக்ககம் : நுண்செயலிக் கட்டுமான வகை. நுண்செயலி, ஒரு கடிகாரச் சுழற்சியில் பல நிரல்களை இயக்கிட வகை செய்யும் கட்டுமான முறை.

Superscript : மேலொட்டு : ஒரு தொகுதியின் குறிப்பிட்ட பொருளை அடையாளம் காணவோ அல்லது எத்தனை மடங்கு என்பதைக் குறிப் பிடவோ ஒரு குறியீட்டின் வலது புறமாகவோ அல்லது மேலேயோ எழுதப்படும் எழுத்து அல்லது இலக்கம்.

superscript mode : மேலொட்டு முறைமை : எழுத்துகளுக்கான இடத்தின் மேற்பகுதியில் வழக்கமான உயரத்தைவிட மூன்றில் இரண்டு பங்கு உயரமுடைய எழுத்துகளை அச்சிடுகிறது.

super server : மீப் பணியகம் : பேரளவு ரேம் மற்றும் வட்டு திறன் பல் செயலகம் மற்றும் அதிவேக பல் செயலாக்கம் (நுண் வழித்தடம், அய்சா போன்றவை) ஆகியவற்றைக் கொண்ட கட்டமைவுப் பணியகம்.

super twist : சூப்பர் ட்விஸ்ட் : முந்தைய டி. என். தொழில் நுட்பத்தில் படிகங்களை 180 டிகிரி அல்லது அதற்கும் மேலே திருப்பி மேம்படுத்தும் எல். சி. டி. தொழில்நுட்பம். அகன்ற பார்க்கும் கோணமும் மேம்பட்ட கருமையும் அளிக்கிறது. அதன் மஞ்சள் மற்றும் பச்சை நீல நிறத்தினால் அதை அடையாளம் காணமுடிகிறது.

superuser : தலைமைப் பயனாளர் : யூனிக்ஸில் வரம்பற்ற அணுகல் சலுகைகள் உடைய பயனாளர். பெரும்பாலும் அவர் முறைமை நிர்வாகியாக இருப்பார்.

super VAR : மீப்பெரும் வார்;மீப் பெரும் மதிப்பேற்று மறு விற்பனையாளர் : மிகப்பெரிய அளவிலான விற்பனையை மேற்கொள்ளும் மதிப்பேற்று மறு விற்பனையாளர் (ValueAdded Retailer) என்பதன் சுருக்கம்.

supervisor : மேற்பார்வையாளர் : இயக்க அமைப்புப் போன்றது.