பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sustained transfer

1403

S-video connector



மாகச் செலவழிக்க வகை செய்யும் ஒரு வசதி. கையடக்கக் கணினிகளில் இருந்த இவ்வசதி பிறவகைக் கணினிகளிலும் இன்றுள்ளன. தொடங்கு (start) பட்டித் தேர்வில் இடைநிறுத்து (suspend) என்னும் கட்டளையைத் தேர்வு செய்தால், கணினியின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆனால் கணினிக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது. விசைப்பலகையில் ஒரு விசையை அழுத்தியதும் கணினி மீண்டும் இயங்கத் தொடங்கிவிடும்.

sustained transfer rate : தாக்குப் பிடிக்கும் பரிமாற்ற வீதம் ; தளராப் பரிமாற்ற வீதம் : வட்டு அல்லது நாடா போன்ற ஒரு சேமிப்புச் சாதனத்துக்கு தக வலைப் பரிமாறும் வேகத்தைக் குறிக்கும் அளவீடு. வழக்கமான நேரத்தைவிட நீட்டித்த நேரத்துக்கு, சாதனத்தின் தரவு பரிமாறும் வேகத்தைக் குறிக்கிறது.

. sv : . எஸ்வி : ஓர் இணைய தள முகவரி எல்சால்வாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

'SVC : எஸ்விசி : இணைப்புறு மெய்நிகர் மின்சுற்று என்று பொருள்படும் Switched Virtual Circuit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பொதி இணைப்பகப் பிணையத்தில் (Packer Switched Network) இரண்டு கணுக்களிடையே ஏற்படும் தருக்க நிலை இணைப்பு. இரண்டுக்குமிடையே தரவுப் பரிமாற்றம் நடைபெற வேண்டியிருந்தால் மட்டுமே இத்தகைய இணைப்பு ஏற்படும்.

SVGA : எஸ்விஜிஏ  : மீத்திறன் ஒளிக்காட்சி வரைகலைக் கோவை என்று பொருள்படும் Super Video Graphics Array என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் உயர் தெளிவு வண்ணக் காட்சி தருவதற்காக 1989ஆம் ஆண்டு ஒளிக்காட்சி மின்னணுத் தரக்கட்டுப்பாட்டு சங்கம் (Video Electronics Standards Association-VESA) உருவாக்கிய ஒளிக் காட்சித் தரவரையறை. எஸ்விஜிஏ ஒரு தர வரையறை என்ற போதிலும் சிலவேளைகளில் ஒளிக்காட்சி பயாஸுடன் ஒத்தியல்புச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

S-video connector : எஸ்-ஒளிக்காட்சி இணைப்பி : ஒளிக்காட்சிச் சாதனங்களின் நிறச்செறிவு (Chrominance), ஒளிச்செறிவு (Luminance) ஆகியவற்றைத்