பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Swар

1404

switch




தனித்தனியே கையாளும் ஒரு வன்பொருள் இடைமுகம். ஆர்சிஏ -வகை அல்லது பிற கலவை இணைப்பிகளைப் பயன்படுத்திப் பெறுகின்ற படிமத்தை விடக் கூர்மையான படிமத்தை இவ்வகை இணைப்பிகள் தரவல்லவை.

swap : இடமாற்று, மாறுமிகள் : 1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுதியையோ, தரவுகளையோ நினைவகத்திலிருந்து வட்டுக்கு, வட்டிலிருந்து நினைவகத்துக்கு இடம் மாற்றிக் கொள்ளல்.

swap file : இடமாற்றுக் கோப்பு : 386இன் மேம்பட்டமுறையில் சாளரத்துக்காகவே தனியாக ஒதுக்கப்பட்ட நிலைவட்டில் உள்ள ஒரு பகுதி. நினைவகத்திலிருந்து தற்காலிகமாக தரவுவை இடமாற்றிக் கோப்புக்கு சாளரங்களை மாற்றித் தரும். இதனால் பிற தரவுகளுக்கு இடம் தாராளமாகக் கிடைக்கும். இட மாற்றிக் கோப்புகள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அமைக்கப்படும்.

swapping : இடமாற்று : 1. மெய்நிகர் சேமிப்பகத்தில் துணை சேமிப்பகத்திலிருந்து உள் சேமிப்பகத்திற்குக் கொண்டு வந்து இருக்கின்ற பக்கத்தை மாற்றுதல். 2. நேரப்பங்கீட்டு அமைப்பில் நிரல் தொடரை உள்சேமிப்பகத்திற்குக் கொண்டு வருதல் அல்லது சேமிப்பகத்தில் சேமித்தல். 3. உள்சேமிப்பகத்தில் இருப்பதை துணை சேமிப்பகத்துக்கு மாற்றும் அதே வேளையில் உள் நினை வகத்தில் இருப்பதை துணை சேமிப்பகத்துக்கு மாற்றுதல்.

swarm ; பிழைத் தொகுதி : பல நிரல் தொடர் பிழைகள்.

swim : நீந்து : ஒளிக் (வீடியோ) காட்சித்திரையில் உள்ள உருவங்கள் வன்பொருள் அல்லது வேறு கோளாறுகளினால் தானாகவே நகர்தல். காட்சித் திரையில் விரும்பத்தகாத முறையில் படம் நகர்தல்.

switch : நிலைமாற்று : நிரல் தொடரமைத்தலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப ஒன்று அல்லது பல நிரல் தொடர் வாக்கியங்களாக மாறுதல். 2. ஒரு கருவி அல்லது சாதனத்தை இயக்கு / நிறுத்து போன்று வேறுநிலைக்கு மின்