பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

switch board

1405

switching


 சாரம் மூலமாகவோ இயக்க முறையாலோ மாற்றுதல்.

switch board manager : நிலை மாற்றிப் பலகை மேலாளர்.

switch, console : பணியக நிலை மாற்றி.

switched connection : இணைப்பித் தொடர்பு.

switched Ethernet : இணைப்புறு ஈதர்நெட் : ஒரு ஈதர்நெட் குவியத்துக்குப் (Hub) பதிலாக ஓர் அதிவேக இணைப்பகத்தைப் (switch) பயன்படுத்தும் ஓர் ஈதர்நெட் பிணையம்.

switched lines : நிலைமாற்றுக் கம்பிகள் : பல்வேறு இடங்களுக்கு தொலைபேசி பொத்தான் மையங்கள்மூலம் இணைக்கப்படும் தகவல் தொடர்புக் கம்பிகள்.

switched network : நிலைமாற்றுப் பிணையம் : பன்னாட்டு அழைப்பு தொலை பேசி அமைப்பு. செலுத்து (transmission) நேரத்தில் ஒரு முனையில் இருந்து வேறொன்றுக்கு ஏற்படுத்தப்படும் தற்காலிக இணைப்பினைக் கொண்ட கட்டமைப்பு.

switcher : சுவிட்சர் (நிலை மாற்றி)  : மெக்கின்டோஷ் கணினிகளில் உள்ள ஒரு தனிச்சிறப்பான பயன்கூறு. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களை நினைவகத்தில் தங்கியிருக்கச் செய்யும். பின்னாளில் சுவிட்சருக்குப் பதிலாக மல்ட்டிஃபைண்டர் (பல் முனைத் தேடி) என்னும் வசதி புகுத்தப்பட்டது.

switches : நிலைமாற்று விசைகள்.

switching : இணைப்பித்தல் ; இணைப்புறுத்தல் : இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைபேசி வழியான பிணைய இணைப்பில் அழைத்தவர்க்கும் அழைக்கப்பட்டவர்க்கும் இடையேயான தொடர்பு ஓர் இணைப்பக மையம் வழியே தான் நடைபெறுகிறது. கணினிப் பிணையங்களில் இரண்டு முனைகள் தகவல் பரிமாறிக் கொள்ள செய்தி இணைப்புறுத்தல் பொதி இணைப்புறுத்தல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு முறையிலுமே இடைநிலை நிலையங்கள் மூலம் செய்திகள் திசைவிக்கப்படுகின்றன. இதனால் அனுப்பி/வாங்கி இரண்டுக்கும் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.