பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

switching algebra

1406

switch-to computer



switching algebra : நிலைமாற்று குறிக் கணக்கியல்  : நிலைமாற்று கொள்கைக்கு செயல்படுத்தப்படும்போது பூலியன் குறிக்கணக்கியலுக்குத் தரப்படும் பெயர்.

switching circuit : நிலைமாற்று மின்சுற்று : இலக்கமுறை மற்றும் நிலைமாற்று அமைப்புகளுடன் மின்சுற்று. இலக்கக் கணினிகள் தொலைபேசி அமைப்புகள் மற்றும் தானியங்கி கணக்கெடுப்பு அமைப்புகள் இதற்குச் சான்றுகள்.

switching hub : இணைப்பகக் குவியம் : வெவ்வேறு தகவல் தொடர்பு இணைப்புகளை ஒரு பிணையத்தில் இணைத்து, பிணையத்திலுள்ள கணினிகளுக்கிடையே செய்திகளையும், தகவல் பொதிகளையும் திசைவித்து அனுப்பும் பணியைச் செய்யும் ஒரு மையச் சாதனம்.

switching matrix : நிலைமாற்று அணி : குறுக்குக் கம்பி, மீறும் அழுத்து கட்டை நிலைமாற்று ஆகிய இரண்டும் விசைப்படு அணியின் இயக்கத்தையே சார்ந்துள்ளன. இணைக்கவேண்டிய மின்சுற்றுகளை செங்குத்து மற்றும் கிடைமட்டக் கோடுகளின் சரியான கோணங்களில் வரிசைப்படுத்துவதற்கான கோட்பாடு என்று இதைக் கூறலாம். இந்தக் கோடுகள் விசையின் உள்ளீடு அல்லது வெளியீடாகும்.

switching speed : இணைப்புறு வேகம் : ஏடீஎம் (ATM-Asynchronous Transfer Mode) அடிப்படையிலான பொதி இணைப்புறு தொலைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தரவுப் பொதிகள், பிணையத்தின் வழியாக அனுப்பப்படும் வேகத்தைக் குறிக்கிறது. இணைப்புறு வேகம் வினாடிக்கு இத்துணை கிலோபிட்ஸ் அல்லது மெகாபிட்ஸ் என்ற அலகுகளில் அளக்கப்படுகிறது.

switching theory : நிலைமாற்றுக் கொள்கை : இரண்டு அல்லது மேற்பட்ட தனிப்பட்ட நிலைகள் உள்ள மின்சுற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் கொள்கை.

Switch Mode Power Supply (SMPS) : நிலைமாற்று முறைமை மின்வழங்கி.

switch more power supply : நிலைமாற்று மின்வழங்கி.

switch, toggle : இருநிலை மாற்றி.

switch-to computer : கணினிக்கு நிலைமாற்று : குரல் தொலை பேசியுடன் தள அணுகு முறையை ஒருங்கிணைப்பது. எடுத்துக்காட்டாக, வாடிக்கை