பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. bd

140

bebugging


. bd : பிடி : வங்க தேசத்தைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங் களப் பெயர்.

be : பிஇ : பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

beacon : இடர் எச்சரிக்கை : ஒரு கட்டமைப்பில், ஒரு முனையில் இருந்து அனுப்பப்படும், கட்டமைப்புச் சிக்கல் பற்றிய அபாயச் செய்தி.

beaconing : இடர் எச்சரித்தல் : ஒரு குறும்பரப்பு பிணையமாகிய லேனில் (Lan) தவறான நிலைகளை சமிக்கை மூலம் அனுப்புதல்.

bead : பீட் : 1. நிரலின் ஒரு சிறிய துணைச் செயல் முறை. பல பீட்கள் ஒன்று சேர்ந்தால் நூல் (த்ரெட்) எனப்படும். 2. கோஆக்சியல் கம்பியில் இன்சுலேட்டரைச் சுற்றியுள்ள உள் கம்பி. 3. தரவுத் தகவல் தள ஆவணத்தில் தேவையின்றி முன்னால் செல்வது.

beam penetration CRT : காற்றை உட்செலுத்தும் சி ஆர்டீ : நிறத்தை உருவாக்கும் நெறியக் காட்சித் திரை அமைப்பு. சிகப்பு மற்றும் பச்சை கந்தகம் பூசப்பட்ட திரையில் செலுத்தப்படும் மின்னணு ஒளிக்கற்றை.

beam splitter : கற்றை பிரிப்பான்

bearer channel : தாங்கு தடம் : ஒர் ஐஎஸ்டிஎன் இணைப்பில் நடைபெறும் 64 kbps தகவல் தொடர்புத் தடங்களில் ஒன்று. ஒரு பிஆர்ஐ (basic rate interface) ஐஎஸ்டிஎன் இணைப்பு 2 தாங்கு தடங்களையும் ஒரு தரவுத் (data) தடத்தையும் கொண்டுள்ளது. ஆனால் பிரைமரி ரேட் இன்டர் ஃபேஸ் (PRI) இணைப்பு வட அமெரிக்காவில் 23 தாங்கு தடங்களையும் ஐரோப்பாவில் 30 தாங்கு தடங் களையும் ஒரு தரவுத் தடத்தையும் கொண்டுள்ளன.

BeBox : பி-கணினி : பி-பெட்டி : ரிஸ்க் (RISC) தொழில்நுட்ப அடிப்படையிலான மிகு திறனுள்ள பவர் பிசி (powerPC) துண் செயலியைக் கொண்ட கணினி. பி நிறுவனம் (Be Inc.) உருவாக்கியது. பி நிறுவனத்தின் இயக்க முறைமையான பிஓஎஸ் (BeOS) நிறுவப்பட்டது. தற்போது மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கருவியாக பி-கணினி விற்பனைக்கு வந்துள்ளது.

bebugging : பிழை நுழைத்துதல் : ஒரு நிரலில் தெரிந்த பிழைகளையே ஏற்படுத்தி, பயிற்சி பிழை நீக்கும்