பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

symmetric digital

1409

synchronous


 symmetric digital subscriber line : சீரொழுங்கு இலக்கமுறை சந்தாதாரர் இணைப்பு : செப்புக் கம்பிகளில் இருதிசைகளிலும் வினாடிக்கு 384 கிலோ பிட்டுகள் வேகத்தில் தரவுப் பரிமாற்றத்தை இயல்விக்கும் இலக்க முறைத் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுட்பம்.

symmetric multiprocessing : செஞ்சீர் பல்செயலாக்கம் : எந்த மையச் செயலகத்துக்கும் பயன்பாட்டு நிரல் அளிக்கத்தக்க பல்செயலாக்க வடிவமைப்பு. ஒரு மையச் செயலகமாகவோ அல்லது நிரலமைப்பவராகவோ செயல்படும். இவ்வாறே கணினியை ஏற்றி அடுத்துள்ள மையச் செயலகத்துக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்து உள்ளீடு/ வெளியீடு வேண்டுகோள்களைச் சமாளிக்கிறது.

symphony : ஒத்திசைவு : லோட்டஸ் நிறுவனத்தின் பீ. சி. களுக்கான ஒருங்கிணைந்த மென் பொருள் தொகுப்பு. இதில் சொல், விரிதாள், வணிக வரை கலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் ஒரு பெரு மொழி ஆகியவை உள்ளடங்கும்

SYN : சின்; எஸ்ஒய்என் : ஒத்திசைவு செயல்படா எழுத்து என்று பொருள்படும் Synchronized Idle Character என்பதன் சுருக்கம். நேர ஒத்திசைவுள்ள தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் எழுத்து/குறி. அனுப்பும்/பெறும் சாதனங்கள் நேர ஒத்திசைவைப் பராமரிக்க இது உதவும்.

sync character : இசைவுரு : ஒரே நேரத்தில் தகவல் தொடர்புகளில் எழுத்துகளை ஒரே நேரத்தில் இயங்கச் செய்வதற்கு அனுப்பப்படும் எழுத்து.

synchronization : ஒரே நேரத்திய அமைப்பு; ஒத்தியக்கம்  : நிகழ்வுகளை காலமுறைப்படி ஒழுங்குபடுத்துதல். தற்செயலாக ஒரே நேரத்தில் ஏற்படுவதாகவோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படுவதாகவோ அமைக்கப்படும்.

synchronization check : ஒரே நேரத்தில் நடைபெறும் சோதனை; ஒத்தியக்கச் சரி பார்ப்பு : சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சூழ்நிலை ஏற்படுகிறதா என்பதை முடிவு செய்ய நடைபெறும் சோதனை.

sychronized : ஒத்திசைந்த.

synchronize now : இப்போது ஒத்திசைவி.

synchronous : ஒத்தியக்க ; சீராக ; சேர்ந்தாற்போல் : ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப்