பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sync signal

1411

synthesis


 கிறது. அனுப்பியும் வாங்கியும் ஒரே நேரச் சமிக்கையைப் பகிர்ந்து கொண்டால் ஒத்திசைவு நேரியல் தகவல் பரிமாற்றம் இயலும்.

sync signal : ஒத்திசை சமிக்கை : ஒத்திசைவுச் சமிக்கை (Synchronization Signal) என்பதன் சுருக்கம். கிடைவரி (Raster) ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி. ஒவ்வொரு வருடுவரியின் இறுதியையும் (கிடைமட்ட ஒத்திசைச் சமிக்கை), கடைசி வருடுவரியின் இறுதியையும் (செங்குத்து ஒத்திசைச் சமிக்கை) இது கொண்டிருக்கும்.

synonym : மாற்றுப் பெயர் : ஆர்டிபி எம்எஸ் தரவுதளத் தொகுப்பில் ஒர் அட்டவணைக்கு இன்னொரு மாற்றுப் பெயர் சூட்டி அதனையே கையாளலாம்.

synonym dictionary : இணைச் சொல் அகராதி (அகரமுதலி) .

syntax : இலக்கணம்; தொடரியல் : ஒரு மொழி மற்றும் அதன் வெளிப்பாடுகளின் அமைப்பைக் குறித்த விதிகள். எல்லா தொகுப்பு நிலை மற்றும் உயர் நிலை மொழிகளும் ஒரு முறையான இலக்கணத்தைக் கொண்டவை.

syntax analyser : சொற்றொடர் பகுப்பி; சொற்றொடரிலக்கண பகுப்பாய்வி.

syntax checker : தொடரமைப்பு சரிபார்ப்பி : ஒரு நிரலாக்க மொழியில் கட்டளைத் தொடர் அமைப்புகளிலுள் பிழைகளை அடையாளம்காட்டும் ஒரு நிரல்.

syntax diagram or flowchart : இலக்கணத் தொடரியல் வரை படம் அல்லது பாய்வு வரை படம் : ஒரு குறிப்பிட்ட மென்பொருள் பயன்பாட்டின் இலக்கண விதிகளைக் காட்டும் பாய்வு வரைபடம். நிரல் தொடரமைப்பு மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

syntax error : இலக்கணப் பிழை : பயன்படுத்தப்படும் நிரல் தொடர் மொழியின் அமைப்பைக் குறித்த விதியை மீறுதல். READ என்பதற்குப் பதிலாக RIAD என்று தட்டச்சு செய்தால் அதற்குப் பொருள் என்ன என்று புரியாமல் கணினி தடுமாறும். இத்தகைய நிரல் தரப்படுமானால் உடனே கணினியிடமிருந்து 'பிழை என்று பதில் வரும். சான்றாக, 110இல் பிழை வந்தால் ஆபத்தில்லை அல்லது ஆபத்தான பிழை என்று அது கூறும்.

syntax rules : இலக்கண விதிமுறைகள்.

synthesis : ஒருங்கிணைவு ; இணைப்பாக்கம் : தனித்தனி