பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

system, database

1415

system disk


 system, database management : தரவுத் தள மேலாண்மை முறைமை.

system development : அமைப்புகள் மேம்பாடு : ஒரு அமைப்பை எண்ணி வடிவமைத்து, அமல்படுத்துதல் புலனாய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, அமலாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய செயல்முறைகளின் மூலம் ஒரு தரவு அமைப்பை உருவாக்குதல். அமைப்பு உருவாக்க ஆயுள் "சுழற்சி தரவு அமைப்பு உருவாக்கம் அல்லது பயன்பாடு உருவாக்கம் என்றும் கூறலாம்.

system development cycle : அமைப்பு உருவாக்க சுழற்சி : பயனாளர் மற்றும் தொழில் நுட்ப அலுவலரின் பரஸ்பர முயற்சி தேவைப்படும் தரவு முறைமை (பயன்பாடு) ஏற்படுத்துவது பற்றிய தொடர் நிகழ்வுகள். இந்த சுழற்சி முறைமை பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பிலிருந்து தொடங்குகிறது. இதில் வாய்ப்பு ஆய்வு, பொது வடிவமைப்பு, மாதிரி அமைத்தல், விவர வடிவமைப்பு, செயல்பாட்டு விவரக் குறிப்பு ஆகியவை இடம் பெறும். நிரல் தொடரமைப்பில் வடிவமைப்பு, செயல்பாட்டு விவரக் குறிப்பு ஆகியவை இடம் பெறும். நிரல் தொடரமைப்பில் வடிவமைப்பு, குறியீடு சோதித்தல் மற்றும் செயல்படுத்துவதில் பயிற்சி, மாற்றல், நிறுவுதல் ஆகியவற்றையடுத்து இறுதியாக பயனாளர் ஏற்பு ஆகியவை அடங்கி உள்ளன.

system development tools : அமைப்பு உருவாக்கக்கருவிகள் : ஒரு தரவு அமைப்பினை உருவாக்கல் அல்லது பயன்பாடுகளை உருவாக்கலுக்காக ஆய்ந்து, வடிவமைத்து ஆவணப்படுத்த உதவும் வரைகலை, சொற்பகுதி மற்றும் கணினி உதவி கருவிகள் மற்றும் தொழில்நுட்பம்.

system diagnostics : அமைப்பு குறை கண்டறிதல்கள் : ஒட்டுமொத்த கணினி அமைப்பின் கோளாறுகளைக் கண்டறிய பயன்படுத்தப்படும் நிரல் தொடர்கள்.

system disk : அமைப்பு வட்டு; முறைமை வட்டு : அமைப்பு மென்பொருளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வட்டுப் பெட்டி அல்லது வட்டு இயக்கி. இதில் செயலாக்க அமைப்பு சேர்ப்பிகள், தொகுப்புகள் மற்றும் பிற பயன்பாடு கட்டுப்பாடு நிரல் தொடர்கள் அடங்கி உள்ளன. இயக்க