பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

system, disk operating

1416

system followup


 முறைமை பதிவு செய்யப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்க இந்த வட்டினைப் பயன்படுத்தலாம்.

system, disk operating : வட்டு இயக்க முறைமை.

systems engineer : முறைமைப் பொறிஞர்; அமைப்புப் பொறியாளர் : அமைப்பு ஆய்வு, அமைப்பு வடிவமைப்பு மற்றும் அமைப்பு நிரல் தொடர் பணிகளைச் செய்யும் நபர்.

system engineering : அமைப்பு பொறியியல்.

system error : முறைமைப் பிழை : இயக்க முறைமை தொடர்ந்து இயல்பாகச் செயல்பட முடியாதபடி முடக்கிப் போடுகிற மென்பொருள் பிழை. இப்பிழை ஏற்படின் கணினியை மீண்டும் இயக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

system failure : அமைப்பு கோளாறு : வன்பொருள் அல்லது மென்பொருள் செயல்படாமை. செயலாக்க அமைப்பின் சிக்கலுடன் சேர்ந்த சிக்கலை இது குறிப்பிடலாம்.

system file : முறைமைக் கோப்பு : மெக்கின்டோஷில், இயக்க முறைமைக்குத் தேவையான எழுத்துருக்கள், சின்னங்கள், முன்னிருப்பான உரையாடல் பெட்டிகள் போன்ற வளங்களைக் கொண்டுள்ள வளக்கோப்பு.

system flowchart : முறைமை பாய்வு நிரல்படம்; அமைப்பு பாய்வு வரைபடம் : கணினி அமைப்பின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் வரைபட உருவில் குறிப்பிடுதல். ஒன்றோடொன்று இணைந்துள்ள பாய்வு வரைபடக் குறியீட்டு முறையில் வரிசைப்படுத்தி குறியிட்ட பயன்பாட்டுக்கு ஏற்ப திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் இயக்க வர்ணனைகளோடு கணினி இயக்கம் குறிப்பிடப்படும்.

system folder : அமைப்பு மடிப்பு : மெக்கன்டோஷில் உள்ள ஃபோல்டர். இதில் சிஸ்டம், ஃபைன்டர், மல்டி ஃபைன்டர், அச்சக இயக்கிகளின் எழுத்துகள், மேசை துணைப் பொருள்கள், ஐ என் ஐ டி-க்கள் மற்றும் சிடேவ்ஸ் (cdeus) ஆகியவை உண்டு.

system followup : அமைப்பின் தொடரல் : புதிர் நிறுவப்பட்ட கணினி இயக்கம் அதன் திட்டப்படி செயல்படுகிறதா என்பதைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து பரிசீலித்தல்.