பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

system font

1417

system interrupt



system font : முறைமை எழுத்துரு : மெக்கின்டோஷ் மற்றும் சில பீசி பயன்பாடுகளில், பட்டித் தலைப்புகள், பட்டித் தேர்வுகள் போன்ற திரைத் தோற்ற உரைகளுக்கு கணினியால் பயன்படுத்தப்படும் எழுத்துரு. (ஆனால் சொல்செயலி அல்லது பிற பயன்பாடுகளில் உருவாக்கப்படும் ஆவணங்களில் இருக்கும் எழுத்துரு அல்ல).

system generation (SYSGEN) : அமைப்பு உருவாக்கம் (சிஸ் ஜென்)  : ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுவப்பட்டு, ஒரு அடிப்படை அமைப்பை துவக்கும் செயல். விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட பொதுவான செயலாக்க அமைப்பு முறையைத் தனிப்பட்ட பயனாளர் தேவைக்கேற்ப மாற்றுதல்.

system house : அமைப்பு அகம்; முறைமை அகம்; அமைப்புகளின் நிறுவனம் : பயனாளரின் தேவைகளுக்கேற்ப வன்பொருள், மென்பொருள் அமைப்புகளை உருவாக்கும் நிறுவனம்.

system image : அமைப்பு உரு : செயலாக்க அமைப்பு, ஓடும் நிரல் தொடர்கள் உள்ளிட்ட நடப்புச் செயலாக்கம் சூழ்நிலையின் நினைவகப் பார்வை.

system implementation : அமைப்பு அமலாக்கம் : ஒரு புதிய (கணினி) அமைப்பை உருவாக்குவதில் இறுதி நிலை. இந்த நிலையில் அமைப்பில் உள்ள பிழை முழுவதும் நீக்கப்படுகிறது. இது பயன்படுத்துவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றும் சரியாக இயங்குகிறதா என்றும் முடிவு செய்யப்படுகிறது.

system installation : அமைப்பு நிறுவுதல் : ஒரு புதிய அமைப்பை இயக்கத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள்.

system integration : முறைமை ஒருங்கிணைப்பு : பல்வேறு மூலக் கருவித் தயாரிப்பாளர்களின் (OEMs) பொருட்களை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்காக உருவாக்கப்படுகின்ற ஒரு கணினி அமைப்பு.

system integrator : முறைமை ஒருங்கிணைப்பி.

system interrupt : அமைப்பு குறுக்கீடு : ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் அந்த இடத்தில் இருந்து துவக்கப்படும் வகையில் நிரல் தொடர் அல்லது வாலாயத்தின் (ரொட்டீனின்)