பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

system priorities

1419

system resource


 system priorities : முறைமை முன்னுரிமைகள்; அமைப்பு முன்னுரிமைகள்  : தரவு அமைப்புத் திட்டங்களை எந்த வரிசையில் எடுத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்யும் முன்னுரிமைகள்.

system programmer : முறைமை நிரல்; அமைப்பு நிரல் தொடராளர் : 1. ஒரு கணினியின் ஒட்டு மொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பயன்பாட்டை திட்டமிட்டு, உருவாக்கி, கட்டுப்படுத்தி, பராமரித்து வரும் நிரல் தொடராளர். 2. நிரல் தொடரமைக்கும் அமைப்புகளை வடிவமைக்கும் நிரல் தொடராளர்.

system programming : அமைப்பு நிரல் தொடரமைத்தல் : கணினியின் செயலாக்க அமைப்புகளாக அமையும் நிரல் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப்பிகளின் கட்டுப்பாடு நிரல் தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளியீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்பு மென்பொருளை உருவாக்கிப் பராமரித்தல்.

system prompt : அமைப்புத் தூண்டி : கட்டளைக்காக செயலாக்க அமைப்பு காத்திருக்கிறது என்பதை குறிப்பிடும் திரையின் மேலுள்ள குறியீடு.

system recovery : முறைமை மீட்சி : கணினி செயல்படாமல் முடங்கிப் போகும் போது, அதனை செயல்படும் நிலைக்குக் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கை. இயக்க முறைமை செயல்படத் தொடங்கியதும் இந்த நடவடிக்கை தொடங்கும். சிலவேளைகளில் பழுதேற்பட்டபோது செயல்பாட்டில் இருந்த பணிகளை மூட வேண்டியிருக்கும். பழுதின் போது நினைவகத்திலிருந்து கட்டமைப்புகளை மீட்டுருவாக்க வேண்டியிருக்கும்.

system requirements : அமைப்புத் தேவைகள் : இறுதிப் பயனாளரின் தரவுத் தேவைகளை ஈடுசெய்யத் தேவைப்படும் தரவு அமைப்பின் திறன்கள். செயல் தேவைகள் Functional requirements என்றும் அழைக்கப்படும்.

system reset : அமைப்பை மீண்டும் சரிசெய்தல் : மீண்டும் அதைத் துவக்கியதாகவோ, நிறுத்தியதாகவோ கணினியை ஏமாற்றும்போது ஏற்படும் இயக்கம்.

system resource : முறைமை மூலம்; முறைமை வளம்  :