பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

systems programms

1421

system tools


 systems programms : அமைப்பு நிரல் தொடர்கள் : கணினி அமைப்புகளின் உள் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்புகள், தொகுப்பிகள், மொழி பெயர்ப்பிகள், சேர்ப்பிகள், வரைகலை ஆதரவு நிரல் தொடர்கள் மற்றும் கணித வாலாயம்கள் போன்றவை இத்தகைய நிரல் தொடர்களாகும்.

systems study : அமைப்பு ஆய்வு : ஒரு வணிக அமைப்பை நிறுவவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஏற்றதா என்பதை முடிவு செய்யும் ஆய்வு.

system support : அமைப்பு உதவி : அமல்படுத்தப்படும் ஒரு கணினி அமைப்பின் பயன் மற்றும் மேம்பாட்டுக்கான சேவைகள் மற்றும் பொருள்களைத் தொடர்ந்து வழங்குதல்.

system support programms : அமைப்பு உதவி நிரல் தொடர்கள் : ஒரு கணினி அமைப்புக்கு பலதரப்பட்ட உதவி சேவைகளை அளித்து அதன் இயக்கம், மேலாண்மை மற்றும் பயனாளர்களுக்கு உதவிடும் நிரல்தொடர்கள். அமைப்புப் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடு, காட்சித்திரைகள் இதற்குச் சான்றுகள்.

systems synthesis : அமைப்பைப் பிரித்தறிதல் : ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளைத் திட்டமிடுதல்.

system termination : அமைப்பு நிறுத்தம் : ஒரு கணினி அமைப்பில் உள்ள அனைத்துச் செயலாக்கங்களும் நிறுத்தப்பட்ட நிலை.

system test : அமைப்புச் சோதனை : சோதனைக்காக ஒரு முழு கணினி அமைப்பினை ஓட்டுதல்.

system testing : அமைப்புகளைச் சோதித்தல் : அமைப்பு ஆய்வாளர் விரும்பும் வண்ணம் உள்ளீடு/வெளியீடு உள்ளிட்ட அனைத்து நிரல் தொடர்களும் தொடர்பு கொண்டுள்ளதா என்பதை வரிசையாக தொடர் நிரல் தொடர்கள் மூலம் சோதித்தல்.

system time/date : அமைப்பு நேரம்/நாள் : கணினி நிறுத்தப்பட்டாலும் ஒரு மின்கலம் மூலம் நேரமும், நாளும் தொடர்ந்து ஓடிவருதல். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து கோப்புகளுக்கும் முத்திரையிடவும், நேரம் சார்ந்த செயல்களைச் செய்யவும் இது தேவைப்படுகிறது.

system tools : முறைமைக் கருவிகள்.