பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tailor made

1426

tangent


tailor made : சிறப்பாகச் செய்யப் பட்ட : ஒரு குறிப்பிட்ட பணி, வணிகம் அல்லது வகையான மக்களுக்காக எழுதப்பட்ட ஒரு நிரல் தொடரை இது குறிக்கிறது. ஒரு தனிப்பட்ட வாடிக்கையாளர் இத்தகைய நிரல் தொடரைக் கேட்பார் அல்லது யாருக்கு வேண்டுமானாலும் விற்கப்படலாம்.

talk : டாக் (பேசு;பேச்சு) : ஒரு யூனிக்ஸ் கட்டளை. இணையத்தில் ஒர் ஒத்திசைவு அரட்டைக்கான கோரிக்கையை உருவாக்கும். talk என்னும் சொல்லைத் தொடர்ந்து இன்னொரு பயனாளரின் பெயரும் முகவரியும் தரப்பட வேண்டும்.

talker : டாக்கர் (பேச்சாளி) : இணைய அடிப்படையிலான ஒத்திசைவுத் தரவு தொடர்பு நுட்பம். பெரும்பாலும் பல் பயனாளர் அரட்டைச் செயல் பாடுகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. வெவ்வேறு அறைகளில், வெவ்வேறு கருத்துகளைப்பற்றி அரட்டையில் ஈடுபடுவதற்கென கட்டளைகள் உள்ளன. நிகழ்நேரத்தில் பயனாளர்கள் தமக்குள்ளே உரை வடிவில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

talk. newsgroups : டாக். நியூஸ் குரூப்ஸ் : டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk. என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக் கும். விவாதத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும். ஏழு யூஸ்நெட் செய்திக்குழு படிநிலைகளுள் ஒன்று. பிற ஆறு : comp., misc., news., rec., Sci., SOC.

take over : ஏற்றல்;மேற்கொள்ளல்.

take up spool : ஏற்புக் கண்டு.

talking computer : பேசும்கணினி : பேச்சு பிரித்தறியும் கருவியைப் பயன்படுத்தி பேச்சை உருவாக்கும் கணினி அமைப்பு.

tandem computers : தொடர் இணைப்புக் கணினி : இரண்டு கணினிகள் இணைக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஒரே சிக்கலுக்காகப் பணியாற்றுவது.

tandem processors : தொடரிணைப்புச் செயலகங்கள் : ஒரு பல் செயலகச் சூழ்நிலையில் ஒன்றோடொன்று இணைந்துள்ள இரண்டு செயலகங்கள்.

tandy corporation : டேண்டி நிறுமம் : நுண்கணினி அமைப்புகளின் உற்பத்தியாளரான ரேடியோஷாக் நிறுவனத்தின் தாய் நிறுவனம்.

tangent : தொடுவரை.