பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

tangent point

1427

tape dump


tangent point : தொடுபுள்ளி.

tangible benefit : மதிப்பிடக் கூடிய மிகுபலன் : ஒரு குறிப்பிட்ட பண மதிப்பைக் கூறக்கூடிய மிகுபலன்.

TANSTAAFL : டான்ஸ்டாஃபல் : இலவசப் பகல்விருந்து என்பது போன்று எதுவுமில்லை என்று பொருள்படும் There ain't no such thing as a free lunch என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் மின்னஞ்சல் அரட்டை, அஞ்சல் பட்டியல், செய்திக் குழுக்கள் மற்றும் பிற நிகழ்நிலை மன்றங்களில் பயன்படுத்தப்படும் சொல்.

tap : தட்டு : செய்தித் தொடர்புகளில், குறும்பரப்புப் பிணையத்தில் முக்கிய அனுப்பும் ஊடகத்துடன் ஏற்படுத்தப்படும் பிணைப்பு.

tape : நாடா : தரவு உள்ளிட்டு சேமிப்பு அல்லது வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் காந்த உணர்பொருள் பூசப்பட்ட அல்லது துளையிடப்பட்ட நீளமான பொருள். படிக்க அல்லது எழுதுவதற்கேற்ற ஒட்டத்திற்கு வசதியாக வரிசை முறையில் நாடாவின் குறுக்கே பல வழித்தடங்களில் தரவு பதிவு செய்யப்படும்.

tape back-up unit : நாடா ஆதரவு அலகு : ஒரு வகை இரண்டாம் நிலை சேமிப்பகம். நிலைவட்டின் உள்ளடக்கங்களின் தனிப்படி எடுத்துவைக்கப் பயன்படும் நாடாப்பெட்டி.

tape cartridge : நாடாப் பேழை.

நாடாப் பேழை

tape cassette : நாடாப் பெட்டி : நுண்கணினி அமைப்புகளில் எண்முறை பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் வரிசைமுறை அணுகுசேமிப்பு ஊடகம்.

tape code : நாடாப் பதிவு முறை.

tape control : நாடாக் கட்டுப்பாடு.

tape deck : நாடா இயக்கி.

tape drive : நாடா இயக்ககம்.

tape dump : நாடா திணி : அறிக்கை வடிவில் அமைக்காமல் நாடா உள்ளடக்கங்களை அச்சுவடிவில் எடுப்பது.