பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tape label

1428

tape station


tape label : நாடா வில்லை : வழக்காமாக காந்தநாடா சுருணையில் உள்ள முதல் பதிவேடு. இதில் நாடாவில் எழுதப்பட்ட நாள், அடையாள எண் அல்லது பெயர் மற்றும் நாடாவில் உள்ள பதிவேடுகளின் எண் ஆகியவை இருக்கும்.

tape leader : நாடா முன்பகுதி : காந்த நாடாவின் முதல் சில மீட்டர்கள். அது அழிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தி தரவு சேமிப்பதில்லை.

tape librarian : நாடா நூலகர் : கணினியில் அனைத்துக் கோப்பு களையும் பாதுகாப்பாக வைப்பதற்குப் பொறுப்பேற்றவர். காந்த நாடா வட்டுப் பெட்டிகளில் உள்ள நிரல் தொடர்கள் மற்றும் தரவுக் கோப்புகள், நுண்திரைப்பட மற்றும் துளையிட்ட அட்டைகள் ஆகியவற்றை இவர் பாதுகாப்பார். கோப்பு நூலகர், தரவு நூலகர் அல்லது பாதுகாவலர் என்றும் அழைக்கப்படுபவர்.

tape library : நாடா நூலகம் : காந்த நாடா கோப்பினை பாதுகாப்பான, சுற்றுப்புறக் கட்டுப்பாடுள்ள சூழ்நிலையில் வைத்திருக்கும் சிறப்பு அறை.

tape, magnetic : காந்த நாடா.

tape mark : நாடா அடையாளம் : ஒரு நாடா கோப்பின் இறுதி முனையைக் காட்டும் கட்டுப்பாட்டுக் குறியீடு.

tape operating system (TOS) : நாடா இயக்கச் செயல்முறை : காந்த நாடாவில் நிரல் தொடர்களைச் சேமித்து வைக்கும் இயக்கச் செயல்முறை.

tape punch : நாடா துளைப்பி.

tape reader : நாடா படிப்பி.

tape reader, paper : தாள் நாடா படிப்பி.

tape reel : நாடா சுருள்.

tape reproducer : நாடா படியெடுப்பி.

tape resident system : நாடா அமைப்பு இயக்கமைவு.

tapes : நாடாக்கள் : பாலியெஸ்டரை அடிப்பொருளாகக் கொண்டு ஃபெர்ரிக் அமிலத்தைப் பதிவு செய்யும் பரப்பாகக் கொண்டிருக்கும். நாடா சுருணைகள் 500 மீட்டர் நாடாக்களை வைத்திருக்கும். இதில் 100 மீமிகு எட்டியல் அல்லது மேற்பட்ட சேமிப்புத் திறனிருக்கும்.

tape spool : நாடா சுருள்;நாடா கண்டு.

tape station : நாடா இயக்ககம்;நாடா நிலையம்.