பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tape-to card converter

1429

tar


tape-to card converter : நாடாவிலிருந்து அட்டைக்கு மாற்றி : காகித நாடா அல்லது காந்த நாடாவிலிருந்து துளையிட்ட அட்டைகளுக்குத் தகவலை மாற்றி அனுப்பும் சாதனம். பொதுவாக இது அணைமுகமாகவே செயலாற்றும்.

tape transport : நாடா அனுப்புப் பொறி : நாடா இயக்கியின் எந்திரப் பகுதி.

tape tree : நாடா மரம் : யூஸ் நெட் இசைச்செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற கேட்பொலி நாடா வினி யோகத்துக்கான ஒரு வழிமுறை. இந்த முறையில், பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் பல்வேறு கிளைப்பயனாளர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் அதனை பிற பயனாளர்களுக்கு அனுப்பி வைப்பர்.

tape unit : நாடா அலகு.

tape verifier, paper : தாள் நாடா சரி பார்ப்பி.

tape volume : நாடா தொகுதி.

tape width : நாடா அகலம்.

ΤΑΡΙ : டேப்பி;டிஏபீஐ : தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interfaceஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் திறந்த நிலைமுறை மைக் கட்டுமானத்தில் (WOSA-Windows Open Systems Architecture) ஒரு நிரலாக்க இடைமுகம். விண்டோஸின் கிளையன் பயன்பாடுகள் ஒரு வழங்கனின் குரல்வழிச் சேவைகளை அனுகுவதற்கு உதவுகிறது. சொந்தக் கணினிகளுக்கும், தொலை பேசிக் கருவிக்கும் இடையே ஊடு செயல்பாட்டை (Interoperability) டேப்பி வழங்குகிறது.

. tar : . டார் : டார் நிரல் மூலம் உருவாக்கப்பட்ட இறுக்கப்படாத வடிவமைப்பில் உள்ள காப்பக கோப்பினை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

tar : டார் : கோப்புகளை ஆவணப்படுத்தி பாதுகாப்பதற்கான யூனிக்ஸ் யூட்டிலிட்டி.'compress'என்ற சொல்லுடன் சேர்த்துப் பயன்படுத்துகிறது.

tar1 : டார்1 : நாடாக் காப்பகம் (Tap Archive) என்பதன் சுருக்கம். யூனிக்ஸில் உள்ள ஒரு பயன்கூறு. பயனாளர் விரும்பினால் பல்வேறு கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே கோப்பாக வைத்துக்கொள்ள இது உதவுகிறது. அந்த ஒற்றைக் கோப்பு