பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tar2

1430

task bar


. tar என்னும் வகைப் பெயரைக் கொண்டிருக்கும்.PKZIP போல, tar கட்டளை கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதில்லை. எனவே tar கோப்புகளை gzip மூலம் இறுக்கிச் சுருக்க முடியும். இறுக்கிய கோப்புகள் . tar. gz என்னும் வகைப் பெயரைக் கொண்டிருக்கும்.

tar2 : டார்2 : டார் பயன்கூறு மூலம் ஒரு கோப்புத் தொகுதியை ஒற்றைக் கோப்பாக மாற்றுதல்.

target : இலக்கு : கோப்பு நகல் பணியில், இலக்கு என்பது நக லெடுத்தது. கோப்புகளை வாங்குகின்ற வட்டு, விவரப்பட்டியல் அல்லது நாடா.

target code (or) object code : இலக்குக் குறிமுறை.

target computer : இலக்கு கணினி;ஒரு நிரல் தொடர் ஏற்றப்பட்டு ஒட்டப்படும் கணினி.

target data set : இலக்குத் தரவு அமைவு :

target directory : இலக்குத் தகைவுத் தொகுப்பு;இலக்கு அடைவு : தரவு அனுப்பப்படுகின்ற விவரப்பட்டியல்.

target disk : இலக்கு வட்டு : நிரல் தொடர் அல்லது வட்டு நகலெடுக்கப்படும் வட்டு.

target drive : இலக்கு இயக்கி : தரவுகள் பதிவுசெய்யப்படும் வட்டு அல்லது நாடாவைக் கொண்ட இயக்கி.

target language : இலக்கு மொழி : வேறு ஒரு மொழியில் சரியாக மொழிபெயர்க்கப்படவேண்டிய மொழி.

target path : இலக்கு வழி.

target programme : இலக்கு நிரல் தொடர்.

target statement : இலக்குக் கட்டளை.

tariff : விலைப்பட்டியல்;கட்டண விகிதம் : செய்தித் தரவு தொடர்புகளில் இடம் பெறுகின்ற வெளியிடப்பட்ட விலைப்பட்டியல். ஒரு குறிப்பிட்ட கருவி, வசதி அல்லது தகவல் தொடர்பு பொது அமைவின் பணி ஆகியவற்றுக்கு இவ்வாறு விலை குறிப்பிடப்படுகின்றது.

task : பணிக் கடமை;பணிப் பொறுப்பு : கணினி சேமிப்பகத்தில் ஏற்றுதல் அல்லது நிரல் அமைத்தல் போன்ற குறிப்பிட்ட வேலையின் தன்மை.

task bar : பணிப்பட்டை : விண் டோஸ் 95/98/மீ/என்டீ/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்ற