பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

T-carrier

1432

ΤCΡ/ΙΡ


குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

T-carrier : டீ-சுமப்பி : ஒரு பொதுச் சுமப்பி வழங்குகின்ற தொலைதூர இலக்கமுறைத் தகவல் தொடர்புத் தடம். இரு முனைகளிலுமுள்ள ஒன்று சேர்ப்பிகள் பல்வேறு குரல் தடங்களை ஒன்றிணைத்து இலக்கமுறைத் தரவுத் தாரைகளாய் (Digital Data stream) அனுப்பி வைக்கின்றன. பெறு முனையில் குரல் தடங்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. 1993ஆம் ஆண்டில் ஏடி&டி நிறுவனம் டி-சுமப்பி சேவையை அறிமுகப்படுத்தியது. சுமந்து செல்லும் தட எண்ணிக்கையைப் பொறுத்து பல்வேறு நிலைகள் உள்ளன. டீ1, டீ2, டீ3, டீ4 ஆகியவை உண்டு. குரல் தகவல் தொடர்பு தவிர இணைய இணைப்புக்கும் டீ சுமப்பிகள் பயன்படுகின்றன.

TcL/Tk : டீசிஎல்/டீகே : கருவிக் கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool Kit என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு உரை நிரல் மொழியும் (TCL) , ஒரு வரை கலைப் பயனாளர் இடைமுகக்கருவித் தொகுதியும் (TK) இணைந்த ஒரு நிரலாக்க அமைப்பு. டீசிஎல் மொழி ஊடாடு நிரல்களுக்கும், உரைத் தொகுப்பான்களுக்கும் பிழை நீக்கிகளுக்கும், செயல்தளத்துக்கும் கட்டளைகளை வழங்க முடியும். அவை சிக்கலான தரவுக் கட்டமைப்புகளை உரை நிரல்களில் உட்செருகுகிறது.

TCP : டீசிபீ : பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை என்று பொருள்படும் Transmission Contol Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் உள்ளிணைந்தது. தரவலை சிறுசிறு பொதிகளாக்கி, ஐபீ மூலமாக அனுப்பி வைக்கிறது. மறு முனையிலிருந்து ஐபீ மூலம் பெறப்படும் தரவுப் பொதிகளைச் சரிபார்த்து ஒன்றுசேர்த்து முழுத் தரவுவை வடிவமைக்கிறது. ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ அடுக்குகளில் போக்குவரத்து அடுக்கில் டீசிபீ செயல்படுகிறது.

TCP/IP : டீசிபீ/ஐபீ : பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission. Control Protocol/Internet Protocolஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடையேயான தகவல் தொடர்புக்கென