பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

TCP/IP Stack

1433

technical interview


அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உருவாக்கிய நெறிமுறை. யூனிக்ஸ் இயக்கமுறையின் அங்கமாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு, இணையம் உட்பட பிணையங்களுக்குள்ளே தகவல் பரிமாற்றத்துக்கான, ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறி முறையாய் நிலைபெற்று விட்டது.

ΤCΡ/ΙΡ Stack : டீசிபீ|ஐபீ அடுக்கு : டீசிபீ/ஐபீ நெறி முறைகளின் தொகுப்பு.

. td : . டீடி : ஒர் இணைய தள முகவரி சாட் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

tear-off : பிய்த்தெடு;கிழித்தெடு : வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI), திரையில் தோன்றும் ஒர் உருப்படியை இழுத்துச் சென்று பயனாளர் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உண்டு. எடுத்துக்காட்டாக, வரைகலைப் பயன்பாடுகள் பலவற்றிலும் பட்டிகள், கருவிப் பெட்டிகள் போன்றவற்றை இழுத்துச்சென்று வேறிடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

tear-off menu : கிழித்து வெளியேறும் பட்டி : அதன் முதன்மை இடத்திலிருந்து வேறொரு பகுதிக்கு மாற்றி அனுப்பி நகர்த்தக்கூடிய திரை மீதுள்ள பட்டி அல்லது வண்ணத் தட்டு.

techie : நுட்பி, நுட்பர் : தொழில் நுட்பம் தெரிந்த நபர். பயனாளர் பணியாற்றும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ, ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலைப் புரிந்துகொள்ள முடியாமல் போனாலோ, உடனடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறக்கூடிய நபர். நுட்பர் ஒரு பொறியாளராக இருக்கலாம் அல்லது ஒரு தொழில்நுட்பாளராக இருக்கலாம். ஆனால், பொறியாளர் அனைவரும் நுட்பராகி விடமுடியாது.

technical analysis package : தொழில் நுட்ப ஆய்வுத் தொகுப்பு : பங்குச் சந்தையில் வாங்கவும், விற்கவும் சிறந்த நேரம் எது என்பதை முதலீட் டாளர்கள் முடிவு செய்ய உதவும் நிரல் தொடர். மாறும் சராசரிகள் வரைபடமாயமைத்தும், கூட்டியும், வணிக அளவுப் போக்குகளை வரைந்தும் பிற ஆய்வுப் பணிகளைச் செய்தும் முதலீட்டாளர்க்கு உதவுகிறது.

technical interview : தொழில் நுட்ப நேர்காணல்.