பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

telecommunications

1435

telecommunications specialist


கம்பிகளின் வழியாக தரவுகளை மாற்றல்.

telecommunications channel : தொலைத் தகவல் தொடர்புத்தடம் : செய்தி அனுப்பும் இடத்தையும் பெறுபவரையும் இணைக்கும் தகவல் தொடர்புக் கட்டமைப் பின்பகுதி. தரவுவை அனுப்பவும், பெறவும் ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இணைக்கப் பயன்படும் கருவியும் இதில் அடக்கம்.

telecommunications control programme : தொலைத் தகவல் தொடர்பு கட்டுப்பாடு நிரல்தொடர் : தொலைத் தகவல் தொடர்புக் கட்டமைப்பில் கணினிகளுக்கும் முனையங்களுக்கும் இடையில் கட்டுப்பாட்டினைக் கவனித்துக்கொள்ளும் கணினி நிரல் தொடர்.

telecommunications controller : தொலைத் தகவல் தொடர்புக் கட்டுப்படுத்தி : ஒரு விவரதகவல் தொடர்பு இடைமுகச் சாதனம். (சிறப்பு நோக்க சிறு அல்லது நுண் கணினி) பல முனையங்களைக் கொண்ட தொலைத் தகவல் தொடர்புக் கட்டமைப்பை இது கட்டுப்படுத்தும்.

telecommunications monitors : தொலைத் தகவல் தொடர்பு திரையகம் : ஒரு தொலைத்தகவல் தொடர்புக் கட்டமைப்பின் கணினிகளுக்கும், முனையங்களுக்கும் கட்டுப்பாட்டைக் கவனிக்கும் கணினி நிரல் தொடர்கள்.

telecommunications processors : தொலைத் தகவல் தொடர்பு செயலகங்கள் : பல முனையங்களிடமிருந்து ஒரே நேரத்தில் தகவல்களை தகவல் தொடர்பு வழித்தடங்களுக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கும் பன்மையாக்கி கள், ஒருமுகப்படுத்திகள் மற்றும் தகவல் தொடர்புக் கட்டுப்படுத்திகள், கொத்துக் கட்டுப்படுத்திகள், பிழை கண்காணித்தல், சிக்கலறிதல், திருத்தல், குறிப்பேற்றம், குறிப்பேற்ற மின்மை, தகவல் சுருக்குதல், விவரக் குறியிடல், செய்திகளை மறு குறியீடு அமைத்தல், துறை பூசல் (port contention (36-A) ) இடைத்தடுப்பு (buffer storage) சேமிப்பகம் ஆகியவைகளுடன் செயற்கைக்கோள் மற்றும் பிற தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கு இடைமுகமாக இருத்தல் ஆகியவற்றையும் இவை செய்யும்.

telecommunications specialist : தொலைத் தகவல் தொடர்பு வல்லுநர் : தகவல் தொடர்பு கட்டமைப்புகளை வடிவமைப்பதற்குப் பொறுப்பேற்றுள்ளவர்.