பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

telecommunity

1436

telemetry


telecommunity : தொலை சமுதாயம் : தொழில்நுட்ப ஏற்புடைத் தன்மைகள் இல்லாமல் தகவல் இலவசமாக அனுப்பி, பெறக்கூடிய சமுதாயம்.

teleconference : தொலை மாநாடு : தொலைத் தகவல் தொடர்பு மூலம் தொலைவான இடங்களில் உள்ளவர்களுடன் மின்னணு கூட்டம் நடத்துதல். நேருக்கு நேர் சந்தித்தல் மற்றும் பயணத்திற்கு மாற்றாகக் கருதப்படும் இத்தொலை மாநாடு இரு வழி ஒளி-ஒலி வசதியுடன் நடத்தப்படுகிறது. தகவல் மற்றும் தொலை நகலி செலுத்தம் ஆகியனவும் தேவைக்கேற்ப இடம் பெறும்.

telecoping : தொலை நகலெடுத்தல்;நீண்ட தூர நகலெடுத்தல்.

telecopy : தொலைபடி;தொலை நகல் குறிக்கவே பயன்படுத்தப்.

tele-education : தொலைக்கல்வி.

tele-entertainment : தொலை பொழுது போக்கு.

telegraph : தந்தி : ஏறக்குறைய ஒரு நொடிக்கு 150. துண்மிகள் வேகத்தில் அனுப்பும் குறைந்த வேக தகவல் தொடர்புச் சாதனம். மோர்ஸ் காலத்தில் இருந்து நீடித்து வருபவை குரல் உரையாடலை அனுப்ப முடியாது.

telehomecare : தொலையில்ல மருத்துவம்.

telemanagement : தொலை மேலாண்மை : ஒரு நிறுவனத்தின் தொலைபேசி அமைப்புகளின் மேலாண்மை.

tele marketing : தொலைச் சந்தையமைப்பு : தொலைபேசி மூலம் விற்பனை செய்தல்.

telematics : டெலிமாட்டிக்ஸ் : தொலைத் தகவல் தொடர்புகள் மற்றும் தானியங்கி தகவல் செயலாக்கத்தின் சங்கமம்.

telemedicine : தொலை மருத்துவம் : குறிப்பாக தொலைத் தகவல் தொடர்புகள் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர் (a) அல்லது ஒரு நோயாளியின் நேரடி உருவப் படங்களை தொலைவில் உள்ள வல்லுநருக்கு அனுப்புவது.

telemedicine clinic : தொலை நிலை மருத்துவமனை.

telemeter : தொலை அளவி.

telemetry : தொலை அளவி : தொலை அளவி கருவிகளை மின்சாரம் அல்லது வானொலி மூலம் தகவல்களை அனுப்புதல். நிலவைச் சுற்றிவரும் ஒரு விண்கலத்தின் மூலம் தரையில் உள்ள ஒரு நிலையத்திற்குத் தரவு களை அளந்து அனுப்பலாம்.