பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

telnet

1437

telesoftware


telnet : டெல்நெட் தொலை இணைப்பு : டெல்நெட் நெறி முறையை நடைமுறைப் படுத்துகின்ற கிளையன் நிரல்.

telnet2 : டெல்நெட்2;தொலை இணைப்பு2  : டெல்நெட் நெறிமுறையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலமாகத் தொலைதூரக் கணினியை அணுகுதல்.

telnet3 : டெல்நெட்3;தொலை இணைப்பு3  : ஒர் இணையப் பயனாளர் இணையத்தில் பிணைந்துள்ள ஒரு தொலை தூரக் கணினியில் நுழைந்து, கட்டளைகளை இயக்க வகை செய்யும் நெறிமுறை. அக்கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்ட, உரை அடிப்படையிலான ஒரு முனையம் போலவே செயல்பட முடியும். டெல்நெட், டீசிபீ/ஐபீ நெறிமுறைக் குடும்பத்தில் ஒர் அங்கம்.

telephone : தொலைபேசி.

telephone equipment : தொலைபேசிக் கருவி.

telephone exchange : தொலைபேசிப் பரிமாற்றம்/இணைப்பகம்.

telephony : தொலைபேசி முறை : ஒலியை மின் சமிக்கைகளாக மாற்றி, குழாய்கள் அல்லது வானொலி மூலம் அனுப்பி அவற்றை ஒலியாக மீண்டும் மாற்றி அனுப்புதல்.

telephony device : தொலைபேசிச் சாதனம் : ஒலி சமிக்கைகளை மின்சார சமிக்கைகளாக மாற்றி வேறிடத்துக்கு அனுப்பி, பெறுமிடத்தில் மின்சாரச் சமிக்கைகளை ஒலியாக மாற்றியமைக்கும் சாதனம்.

telephotography : தொலை ஒளிப்படவியல் : மின் தகவல் தொடர்பு வழித்தடங்களின் மூலம் ஒளிப்படங்களை அனுப்புதல். பொது தகவல் தொடர்பு அனுப்பும் நிறுவனங்கள் இவற்றை வழங்குகின்றன.

teleprinter : தொலை அச்சுப்பொறி, தொலை அச்சு : தானியங்கி அச்சிடும் சாதனம்.

teleprocessing : தொலை செயலாக்கம் : தொலைவில் உள்ள இடங்களுக்கும் தகவல் செயலாக்க மையத்திற்கும் மற்றும் இரண்டு கணினி அமைப்புகளுக்கும் இடையில் தொலைபேசிக் கம்பிகள் மூலம் தகவல்களை அனுப்புதல். தகவல் தொடர்புகள் மற்றும் தகவல் செயலாக்கக் கருவிகளை இணைத்துப் பயன்படுத்துவது.

telesoftware : தொலை மென்பொருள் : தொலைபேசிக் கம்பி அல்லது தொலைக்காட்சி