பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

template wizzard

1439

terabit storage


வமைப்பிகள் அல்லது வடிவமைப்பு உதவிகளின் பகுதிகள். ஒருமுறை உருவாக்கப்பட்டால், மீண்டும் வரைவதற்குப் பதிலாக, அதையே மீண்டும் தேடி எடுக்க முடியும். 3. மென்பொருள் மேம்பாட்டில் நிரல் தொடர்களின் தொகுதியின் மூலம் வட்டில் சேமிக்கப்பட்டதை கணினிக்கு நிரலிட்டு விரிதாளில் உள்ள தகவல்கள் பற்றிய சில இயக்கங்களைச் செய்யுமாறு கூறுதல். சான்றாக, டெல்லிக்கு மேற்கே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 10 விழுக்காடு ரயில் கட்டணத்தைக் கூட்டுக என்பது.

template wizzard : வார்ப்புரு வழிகாட்டி.

temporary font : தற்காலிக எழுத்துரு : மென்பொருளாலோ அல்லது கையாலோ அச்சுப் பொறியில் மீண்டும் திருத்தி அமைக்கும்வரை அச்சுப்பொறியின் நினைவகத்தில் தங்கியிருக்கும் மென் அச்செழுத்து.

temporary password : தற்காலி நுழைசொல்.

temporary storage : தற்காலிக சேமிப்பகம் : நிரல் தொடரமைத்தலில், இடைக்கால முடிவுகளை சேமித்து வைப்பதற்கான சேமிக்கும் இடங்கள்.

ten key pad : பத்து விசை பட்டை : எண்களை எளிதாக நுழைக்க உதவும் 0 முதல் 9 வரை எண்களை தனித் தொகுதியாகக் கொண்ட விசை. கணிப்பி விசை அட்டை போன்றது.

ten's complement : பத்தின் கூட்டெண் : ஒரு குறிப்பிட்ட மதிப்பின் எதிரெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் எண். எல்லா எண்களும் 9 ஆக உள்ள ஒவ்வொரு இலக்கத்திலிருந்தும் கழித்து அதனுடன் ஒன்றைச் சேர்த்து இந்த எண் கொண்டு வரப்படுகிறது. சான்றாக 654-ன் பத்தின் கூட்டெண்ணாக வருவது 346, 999 உடன் 346-ஐக் கழித்து அதனுடன் 1-ஐக் கூட்டி இந்த எண் கொண்டு வரப்படுகிறது.

tensile strength : இழுப்பு வலு.

tera : டெரா : ஒரு ட்ரில்லியனுக்கு மெட்ரிக் முன்னிணைப்புச் சொல். டி என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

terabit : டெராபிட்;டெரா துண்மி : ஒரு டிரில்லியன் துண்மிகள். டிபி, டிபிட் அல்லது டெராபிட் என்றெல்லாம் அழைக்கப்படும்.

terabit storage : டெராபிட் சேமிப்பு : 12துண்மிகள் அளவில் 10 திறனுள்ள சேமிப்புச் சாதனங்