பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144


Bernoulli sampling process Bernoulli sampling process : பெர்னவுலி மாதிரிகாண் செயலாக்கம் : ஒவ்வொரு முயற்சியிலும் இரண்டிலொரு முடிவைத் தரக்கூடிய ஏதேனும் ஒரு பரிசோதனையை, தொடர்ச்சியாக n தடவைகள், ஒன்றையொன்று சாராத, ஒரே மாதிரியான தேர்வாய்வுக்கு உட்படுத் தும்போது வரக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் மேற் கொள்ளப்படும் புள்ளியியல் ஆய்வு. (எ-டு) : ஒரு நாணயத்தைச் சுண்டினால் பூ அல்லது தலை விழும். 10 முறை சுண்டினால் எத்தனை முறை தலை விழும் ? எத்தனை முறை பூ விழும்?

Bernoully drive : பெர்னவுலி இயக்ககம்.

Berr Clifford : பெர்ரி கிளிஃபோர்டு : 1939இல் ஜான் அடனசாஃபுடன் சேர்ந்து ஏபிசி எனப்படும் முதல் மின்னணு இலக்கமுறை கணினியைக் கண்டுபிடித்தவர்.

best of breed : உள்ளதில் சிறப்பு : ஆயிரத்தில் ஒன்று : குறிப்பிட்ட வகைப் பிரிவில் மிகச்சிறந்த பொருளைக் குறிக்கும் சொல். வன்பொருளாகவோ மென்பொருள் தொகுப்பாகவோ இருக்கலாம்.

beta site : பீட்டாத் தளம் : ஒரு மென்பொருளின் பீட்டா சோதனையை மேற்கொள்ளும் ஒரு தனி நபர் அல்லது ஒரு நிறு வனம். மென்பொருளை உருவாக்கிய நிறுவனம், பெரும்பாலும் பட்டறிவுமிக்க வாடிக்கையாளர், தன்னார்வலர்களின் குழுவில் சிலரையே பீட்டாத் தளமாகத் தேர்வு செய்யும். பெரும்பாலான பீட்டாத் தளத்தினர் இச்சேவையை இலவசமாகவே செய்வர். வெளியீட்டுக்கு முன் பயன்படுத்தும் வாய்ப்பு, மென்பொருளின் இலவச நகல் இவர்களுக்குக் கிடைக்கிறது. வெளியிடப்பட்ட பின்பு, இறுதிப் படைப்பின் இலவச நகலும் இவர்களுக்குக் கிடைக்கும்.

beta test : பீட்டா சோதனை : மென்பொருள் அல்லது வன்பொருள், இறுதியாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக பல கட்டச் சோதனைக்கு உட்படுத்தப்படும். அவற்றுள் வெளியீட்டுக்கு முந்தைய இறுதிக் கட்டச் சோதனை 'பீட்டா சோதனை' எனப்படுகிறது.

beta testing : பீட்டா சோதனையிடல் : பொது மக்களுக்கு வெளியிடுவதற்கு முன்பு வன்பொருள், மென்பொருள்களை,

தேர்ந்தெடுத்த சிலரிடம் கொடுத்து அவரவர் பணியிடத்