பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thick film

1449

thin server


தொலைபேசி வழி அணுகலையும் அளித்து வருகிறது.

thick film : தடித்த படச்சுருள் : சிப்புவின் மேலுள்ள டிரான்சிஸ்டர் களாலான நுண்ணிய மேலடுக்குகளைவிட தடிமனான உலோகப் பொருள், அரைக்கடத்தி அல்லது காந்தப்பொருள். சான்றாக, தடித்த உலோகத் திரைப் படங்களை உயரின நுண்மின் சுற்றுகளின் பீங்கான் அடிப்பகுதியில் மேல் பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது.

thimple : சிமிழ் : சிமிழ் வடிவத்தில் உள்ள அச்சிடும் பொருள். எழுத்துத் தர அச்சிடுவதற்குப் பயன்படுகிறது. சிமிழைச் சுற்றி எழுத்து அச்சுகள் வட்டமாக வரிசைப் படுத்தப்படுகின்றன. அச்சிடப்படவேண்டிய எழுத்தின் அச்சு சுழன்று சரியான இடத்தில் சுற்றிவரும்போது சுத்தியல் அதை முன்னோக்கி அழுத்தி காகிதத்தில் அச்சிடும்.

thimble printer : சிமிழ் அச்சுப் பொறி : சிமிழ் வடிவத்தில் அச்சு சக்கரத்தைப் பயன்படுத்தும் அச்சுப்பொறி. இதன் அடிக்கும் சாதனம் நாடாவுக்கு நேராக அடிக்கும் பகுதியைக் கொண்டுவந்து காகிதத்தில் அச்சிடுகிறது.

thin client : மெல்லிய கிளையன்;சிறுத்த கிளையன்.

thin film : மெல்லிய படச்சுருள்;மென்படலம் : ஒட்டவைத்த அடிப்பகுதி, பொதுவாக ஒரு தட்டையான பிளேட்டுகளாலான மெல்லிய புள்ளிகளை வைத்து ஏற்படுத்தப்படும் கணினி சேமிப்பகம் அடிப்பகுதியும் சேர்க்கப்பட்ட கம்பிகளில் உள்ள மின்சக்திமூலம் புள்ளிகள் காந்தப்படுத்தப்படுகின்றன.

thin film head : மெல்லிய படச்சுருள் முனை : அதிக அடர்த்தி உள்ள வட்டுகளுக்கான படி/எழுதுமுனை நிக்கல்-இரும்பு மையத்தில் வைக்கப்பட்ட கடத்தும் படச்சுருளின் மெல்லிய அடுக்குகளால் இது அமைக்கப்படுகிறது.

thin film storage : மென் படலச் சேமிப்பகம்.

thin server : மெல்லிய வழங்கன்;சிறுத்த வழங்கன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டுமானம். பெரும்பாலான பயன்பாடுகள் கிளையன் கணினியிலேயே இயங்கும். இதுபோன்ற கிளையன், கொழுத்த கிளையன் என வழங்கப்படுகிறது. எப்போதாவது தொலைதூர வழங்கனில் தரவு செயல்பாடுகள் நடக்கும். இதுபோன்ற ஏற்பாடு சிறந்த கிளையன் செயல்திறனைக்