பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ticket

1454

TIFF or TIF


உமிழப்படுகின்ற, வழக்கமாய் அடிக்கடி ஏற்படுகின்ற சமிக்கை. இந்த சமிக்கையால் உருவாக்கப்படும் குறுக்கீட்டையும் இது குறிக்கிறது. 2. சில நுண்கணினி அமைப்புகளில், குறிப்பாக மெக்கின்டோஷ் கணினியில், ஒரு வினாடியில் அறுபதில் ஒருபங்கு. நிரல்கள் பயன்படுத்தும் அகநிலைக் கடி காரத்தில் பயன்படுத்தப்படும் அடிப்படை நேர அலகு.

ticket : நெருக்க உரிமை.

ticket based access control : உரிமையுடனான நெருக்கக்கட்டுப்பாடு.

ticket list : நெருக்க உரிமைப் பட்டி.

tie breaker : கட்டு பிரிப்பி : ஒரே நேரத்தில் இரண்டு செயலாக்க அலகுகள் ஒரே வெளிப்புறச் சாதனத்தினைப் பயன்படுத்த ஏற்படும் மோதலைச் சமாளிக்கும் மின்சுற்று.

tie line : முடிச்சு இணைப்பு : ஒரு நிறுவனத்தின் இரண்டு அல்லது மேற்பட்ட பிரிவுகளை (தொலை தூரக் கிளைகளை) இணைப்பதற்காக, ஒரு தகவ்ல் தொடர்பு நிறுவனத்திடமிருந்து (தொலை தொடர்புத் துறை யினர்) குத்தகைக்குப் பெறப்படும் ஒரு தனியார் இணைப்பு.

tie mark : கட்டு அடையாளம் : ஒரு அளவில் மதிப்புகளைக் காட்டும் அடையாளம். கண்டறியப்பட்ட எண் மதிப்புகளுக்கிடையில் உள்ள புள்ளிகளைக் காட்ட பயன்படுத்தப்படுகிறது.

. tif : டிஃப் : குறியிட்ட படிமக்கோப்பு வடிவில் (Tagged Image File Format -TIFF) அமைந்த பிட்மேப் படிமங்களை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர்.

TIFF or TIF : டிஃப் : படிமக் கோப்பு வடிவாக்கம் எனப்பொருள்படும் Tagged image File Format அல்லது Tag Image File Format என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். சாம்பல் அளவீட்டு வரைகலைப் படிமங்களை வருடி, சேமித்து, பரிமாறிக்கொள்ள, பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோப்பு வடிவம். பழைய வரைவோவியப் பயன்பாடுகளில் (பழைய மேக்பெயின்ட் போன்ற) டிஃப் வடிவாக்கம் மட்டுமே இருந்து வந்தது.

ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன நிரல்களில் ஜிஃப், ஜேபெக் போன்ற விதவிதமான வடிவாக்கங்களில் படிமங்களைச் சேமிக்க வசதிகள் உள்ளன.