பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

time-of-day count

1457

time series analysis


கணினி அமைப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பது.

time-of-day count : நாளின் நேரத்தை எண்ணுதல் : பயாஸ் தரவுப் பகுதியில் உள்ள ஒரு மாறிலி. நேர குறுக்கீட்டினால் தொடர்ந்து காட்டப் படுவது செயலாக்க முறை. அதனுடைய மதிப்பைப் பயன்படுத்தி நாளின் நேரத்தைக் கணக்கிடும்.

time out : நேரம் போனது;காலங்கடந்தது : ஒரு குறிப்பிட்ட வெளிப்புறச் சாதனம் வேலை செய்யவில்லை என்பதைக் குறிப்பிட உள்ளிட்டு/வெளி யீட்டு இயக்கங்கள் பயன்படுத்தும் ஒரு சொல்.

time out settings : நேர முடிவு அமைப்புகள்.

time quantum : கால அளவு : நேரப் பங்கீட்டு அமைப்பால், ஒவ்வொரு அமைப்பாளருக்கும் ஒதுக்கப்படும் கால அலகு.

timer : காலங்காட்டி : கணினியின் உட்பகுதியில் உள்ள கடிகாரம்.

timer clock : நேரம் காட்டிக் கடிகாரம்.

time, real : நிகழ் நேரம்.

time, response : மறுமொழி நேரம்.

timer interrupt : நேரங்காட்டி குறுக்கீடு : 8253 நேரம்காட்டும் சிப்புவால் ஒரு நொடிக்கு 18. 2 தடவைகள் காட்டுமாறு தூண்டப்படும் ஒரு குறுக்கீடு. ஒவ்வொரு தடவை அது இயங்கும் போதும் பயாஸ் (Bios) நாளின் நேரத்தைக் காட்டும் கணக்கில் ஒன்று கூட்டப்படுகிறது.

time, run : இயக்க நேரம்.

time scale : கால அளவுமுறை.

time, search : தேடு நேரம்.

time, seek : நாடும் நேரம்;கண்டறி நேரம்.

time series : காலத் தொடர் : தரவுகளை நீண்ட கால அளவில் தொகுத்துக் கூறுதல். ஒரு குறிப்பிட்ட தரவு தொகுதியின் முழுப்பகுதியும் தெரியவில்லை என்றாலும் அவற்றின் எதிர்காலம் மதிப்புகளும் தெரிய வில்லை என்றபோதிலும் அத்தொகுதியின் பொதுவான நடத்தையை குறிப்பிடுவது.

time series analysis : காலத்தொடர் ஆய்வு : ஒரு தரவுத் தொகுதியின் நீண்ட காலப் போக்குக்கான காரணங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு புள்ளி விவரமுறை. சான்றாக, கோதுமையின் விலை ஆண்டு முழுவதும் ஏறி,