பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

time services

1458

timing signals


இறங்குகிறது;ஆண்டுக்காண்டு மாறுகிறது. காலத் தொடர்பு ஆய்வு இந்த ஏற்ற, இறக்கத்திற்குள் ஒரு ஒழுங்கைக் கண்டுபிடித்து பருவகாலம், போக்கு கள் மற்றும் வறட்சி போன்ற சுழற்சி நிகழ்வுகளைக் கண்டுபிடித்தல்.

time services : நேரத் தொடர்.

time share : காலப் பகிர்மானம்;பகிர்வு நேரம்.

time sharing : நேரப்பங்கிடல்;காலப்பங்கீடு;நேரப் பகிர்வு முறை : ஏறக்குறைய ஒரே நேரத்தில் கணினி வசதியைப் பல பயனாளர்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் இயக்கமுறை. ஒவ்வொரு பயனாளரையும் தொடர்ச்சியாக அதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள கணினி அனுமதித்தாலும், எல்லா பயனாளர்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொண்டதாகவே தோன்றும்.

time sharing priority : நேரப் பங்கீட்டு முன்னுரிமை.

time slice : காலச் சிப்பு : ஒரே அலகு.

time slicing : காலக் கூறு;நேரம் கூறிடல் : பல நிரல் தொடரமைப்பு அமைப்பில் ஏதாவது ஒரு நிரல் தொடரே மையச் செயலகத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தடுக்க, செயலாக்கத்தை ஒவ்வொரு நிரல் தொடருக்கும் பிரித்து ஒதுக்கும் முறை.

time slot : கால ஒதுக்கீடு;நேர ஒதுக்கீடு : இரண்டு சாதனங்கள் ஒன்றாக இணைக்கப்படும் போது இடைவெளிவிட்டு தொடர்ந்து திரும்பத் திரும்ப வரும் நேரம்.

time to live : வாழ்நாள்;ஆயுள் காலம் : இணையத்தில் அனுப்பப்படும் ஒரு தரவுப் பொதியின் தலைப்புப் புலம். அந்தப் பொதியை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

time total : மொத்த நேரம்.

time transfer : ப்ரிமாற்ற நேரம்.

timing signals : நேர சமிக்கைகள் : கணினி இயக்கங்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்க வெளிப்புறச் சாதனங்கள் அல்லது செயலகங்களில் உருவாக்கப்படும் மின்துடிப்புகள். முக்கிய நேர சமிக்கைகள் கணினியின் கடிகாரத்திலிருந்து வருகிறது. பல மெதுவான சுழற்சிகளாகப் பிரிக்கப்படும் அலை வரிசைகளை இந்த கடிகாரம் ஏற்படுத்துகிறது. நேரப்பங்கீடு