பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

beta test site

145

.bg


திலேயே பயன்படுத்தச் செய்து அதில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிதல்.

beta test site : பீட்டா சோதனை செய்யுமிடம் : புதிதாக உருவாக்கப் பட்ட கணினி அமைப்பை சாதாரண இயக்கச் சூழ் நிலையில் பல மாதங்களுக்குச் சோதனை செய்யும் ஒருவித செயலாக்க மையம் அல்லது ஒரு கிளை அலுவலகம் அல் லது பிரிவு. முறையாக வெளியிடப்படும் முன்பு ஏராளமான பேர்களுக்குக் கொடுத்து பீட்டா சோதனை செய்யப்படும் மென்பொருள்.

beta version :பீட்டா பதிப்பு: வெளியீட்டுக்கு முந்தைய பரிசோதனைப் பதிப்பு.

between : இடையில்

Bezier : பெஸியர் : அல்கோரிதத்தில் உருவாக்கப்படும் ஒரு வகை வளைவு. ஃபிரெஞ்சு கணிதமேதை பியரே பெஸியரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான வடிவங்களை வரை யறுக்க பெஸியர் வளைவுகளுக்கு அல்கோரி ஒரு சில புள்ளிகளே போதுமானது. ஒவிய மென்பொருளுக்கு உகந்தது.

பெஸியர் வளைவு

bezier curve :பெஸியர் வளைவு : ஒரு குறிப்பிட்ட கணித முறைப்படி இரண்டு தனிப் புள்ளிகளை இணைத்து பெஸியர் வளைவு வரையப்படும் இழைவான வளைகோடு மற்றும் வரை தளம். கேட் உருமாதிரி (CAD model)களுக்கு தேவையான ஒன்று. ஒரு வடிவத்தை தோராய மாக வடிவமைக்க ஏனைய கணிதவியல் மாதிரிகளை விடச் சிறந்தது. ஏனெனில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புள்ளிகளைக் கொண்டே அதிக எண்ணிக்கையிலான வடிவங்களைப் பெறமுடியும்.

.bց : .பி.ஜி : பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இணைய தளம்