பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tiny BASIC

1459

TLA


அல்லது உண்மை நேர கடிகாரத்திடமிருந்து மற்ற நேர சமிக்கைகள் வருகின்றன. வட்டு இயக்கிகள், நேர சமிக்கைகள் செய்ய நினைவக வட்டுப் பகுதி ஒன்றில் துளைகள் அல்லது அடையாளங்கள் செய்தோ அல்லது ஏற்கனவே பதிவுசெய்த எண் தரவுகளையோ பயன்படுத்தலாம்.

tiny BASIC : சின்னஞ்சிறு பேசிக் : முதல் தலைமுறை தனிநபர் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட அளவான நினைவகத்தைக் கொண்ட பேசிக் மொழியின் ஒரு துணைப்பகுதி.

tiny model : மிகச்சிறு மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிகளில் செயல்படுத்தப்படும் ஒரு நினைவக மாதிரியம். இதில், நிரல் குறி முறைக்கும், தரவுகளுக்கும் சேர்த்து மொத்தம் 64 கிலோபைட்டுகள் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். சி-மொழி நிரல் ஒன்றை மிகச் சிறு நினைவக மாதிரியத்தில் மொழி மாற்றி (compile) உருவாக்கப்பட்ட EXE கோப்பினை, EXE2BIN போன்ற பயன்கூறுகள் மூலம் COM கோப்புகளாக மாற்றியமைக்க முடியும்.

tip of the day : இன்றைய உதவிக் குறிப்பு.

title : தலைப்பு.

title bar : தலைப்புப் பட்டை : விண்டோஸ் போன்ற வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) திரையில் தோன்றும் சாளரங்களின் மேற்பகுதியில் அச்சாளரத்தின் பெயரைத் தாங்கியிருக்கும் பட்டை. பெரும்பாலான தலைப்புப் பட்டைகளில் சாளரத்தை மூடவும், அளவு மாற்றுவதற்குமான பொத்தான்களும் இடம் பெற்றிருக்கும். தலைப்புப் பட்டையில் சுட்டியை வைத்து அழுத்திக்கொண்டு சாளரத்தை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திச் செல்லலாம்.

. tj : . டீஜே : ஒர் இணைய தள முகவரி தாஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. tk : . டீகே : ஒர் இணைய தள முகவரி டேக்கேலாவ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

T2L : டி2எல் : TTL என்பதற்கு மாற்றுப் பெயர்.

TLA : டிஎல்ஏ : மூன்றெழுத்துச் சுருக்கச்சொல் எனப்பொருள் படும்

Three Letter Acronym என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.