பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tool

1462

top down development


பொறிகளிலும் பயன்படுத்தப்படும் மின்சக்தி ஏற்றப்பட்ட/மை. கண்ணுக்குத் தெரியாத உருவத்தினை எதிர் துருவத்தில் உள்ள பலகை, உருளை அல்லது காகிதத்தில் விழச்செய்யும்.

tool : கருவி : சில கணினி அமைப்புகளில் உள்ள ஒரு பயன்பாட்டு நிரல் தொடர்.

tool bar : கருவிப்பட்டை.

toolbox : கருவிப்பெட்டி : முன் வரையறுக்கப்பட்ட (பெரும்பாலும் முன்பே மொழி மாற்றப்பட்ட) நிரல் கூறுகளின் தொகுதி. ஒரு குறிப்பிட்ட கணினிக்காக, ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்கு, ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக நிரல் எழுதும் ஒரு நிரலர் இந்த மென்பொருள் கருவிகளைப் பயன் படுத்திக்கொள்ள முடியும்.

toolkit : கருவிப்பெட்டி : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுதப்பட்டு, இயக்கப்படுவதற்கு அனுமதிக்கும் மென்பொருள் வாலாயங்களின் தொகுதி. பல்வேறு பணிகளைச் செய்வதற்காக பயன்பாட்டு நிரல் தொடர்கள் வாலாயங்களை அழைக்கும். சான்றாக, ஒரு பட்டியலைக் காட்டுதல் அல்லது வரைகலைக் கோடு ஒன்றை வரைதல்.

toolkit software : கருவித் தொகுதி மென்பொருள்;கருவிப் பெட்டி மென்பொருள் : முழு நிரல் தொடரையும் அவர்களே எழுதுவதற்குப் பதிலாக, பயனாளர்கள் தாங்களே தங்களது சிறப்புப் பயன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் மென்பொருள் தொகுப்பு.

tool palette : கருவி வண்ணத் தட்டு : ஊடாடு வரைகலைத் தேர்வுக்காக பட்டியல் அமைப்பில் திரை மீதுள்ள பணிகளின் தொகுதி பெரும்பாலும் வரைகலை சார்ந்தது.

tools : கருவிகள்.

top : உச்சி;உச்சிப் பகுதி.

top down : மேல்-கீழ்.

top-down design : மேல்-கீழ் வடிவமைப்பு : ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர் நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்) வரையறுப்பதில் தொடங்குகிறது. ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரயறுக்கப் படுகின்றன. இவ்வாறு அடுத்தடுத்த நிலைக்குச் செல்லல்.

top down development : மேலிருந்து கீழ் மேம்பாடு : கணினி நிரல் தொடர் மேம்பாட்டுக்கான வடி