பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

top-down methodology

1463

topic drift


வமைப்புக் கட்டுமான பிரிவு, மேம்பாட்டு செயலாக்கத்தின் போது உயர் நிலைப் பணிகள் யாவும் குறியீடு அமைக்கப்பட்டு வெளியமைப்பு வடிவத் தில் முன்னதாகவே சோதிக்கப்படும். கீழ்நிலை தரவுகள் சேர்க்கப்பட்டு வரையறைகள் மற்றும் இடைமுகங்கள் மூலம் போகப்போக சோதிக்கப் படும். வேலைக் கட்டுப்பாட்டு மொழிகள் மற்றும் செயலாக்க முறைகள் போன்ற மேல்நிலைகளில் துவங்கி இதன் மொத்த அமைப்பு உருவாக்கப் படுகிறது. படிப்படியாக இது முன்னேறி நிரல் தொடர் கட்டுப்பாட்டுக் கூறுகள் வரை விரிந்து சென்று கீழ்நோக்கிய வரிசைமுறை அமைப்பில் நிரல் தொடர் கூறுகளின் மேலும் துல்லியமான நிலைகளுக்குக் கீழிறங்கி வருகிறது. இந்த அணுகுமுறை இரண்டுவகை விளைவுகளை ஏற்படுத்தும். முதலாவது, மேம்பாட்டினை ஒட்டி அதேவேளையில் கணினி அமைப்பு ஒருங்கிணைவது ஏற்படும். அடுத்ததாக, மேம்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கூடுதல் திறனுடைய இயக்க அமைப்பு பயன்பட்டு வருகிறது.

top-down methodology : மேல்-கீழ் செயல்முறை : கலவையான தன்மையை ஒழுங்குபடுத்து வதற்கான கட்டுப்பாடான அணுகுமுறை. இதில் ஒரு அமைப்பின் மேல்நிலை பணிகள் அடையாளம் காணப்பட்டு பின்னர் இப்பணிகளை வரிசைக் கிரமமான புரியக்கூடிய கீழ் நிலை கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது.

top-down programming : மேல்-கீழ் நிரலாக்கம் : நிரலாக்கத்தில் ஒர் அணுகுமுறை. முதலில் நிரலின் முதன்மைப் பகுதி எழுதப்படும். முதன் மைப் பகுதியில் பல்வேறு துணை நிரல்களுக்கான அழைப்புகள் இருக்கும். அதன் பிறகு துணை நிரல்களுக்கான குறிமுறைகள் எழுதப்படும். அதில் இடம்பெறும் அடுத்த நிலை துணை நிரல்களுக்குப் பிறகு குறிமுறை எழுதப்படும்.

topic drift : தலைப்பு நழுனல்;தலைப்பு திசைமாறல் : இணையத்தில் நடைபெறும் நிகழ்நிலைக் கலந்துரையாடலின் மூலக்கருப்பொருள், தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத பிற தலைப்புக்குத் தாவுதல். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, திரைப்படத்துக்குத் தாவி, பிறகு செய்தித்தாளுக்குப்