பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

total transfer

1465

tower


total transfer : முழு மாற்றல்.

touch pad : தொடு திண்டு : அழுத்த உணரிகளைக் கொண்ட ஒருவகை வரைகலை வரை பட்டிகை (tablet). கையால் தொட்டு காட்டியின் இடம் உணர்த்தப்படும். மின் காந்தத்தைப் பயன்படுத்தும் மிகு தெளிவு வரை பட்டிகைகளும் உள்ளன.

touch screen : தொடுதிரை : கை விரல்களைப் பயன்படுத்தி திரையில் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பு அல்லது ஒரு பட்டியலின் பொருள் அல்லது இடை முகத்தைத் தேர்ந்தெடுத்துக் காட்டப் பயன்படுத்தப்படுவது.

touch sensitive : தொடு உணர்வு.

touch sensitive screen : தொடு உணர் திரை : 1. திரையில் குறிப்பிட்ட இடத்தில் விரலாலோ அல்லது வேறு பொருளாலோ தொடுவதன் மூலம் கட்டளைகளை அனுப்ப உதவும் காட்சித்திரை. 2. ஒரு ஒளிக்காட்சிக் குழாயின் முன்னால் தெளிவான குழைமத்துளைச் (பிளாஸ்டிக்) சேர்த்துக் கொண்டுள்ள சிறப்பு வகை ஒளிக்காட்சி. எந்த இடத்தில் திரையில் தொடப்படுகிறது என்பதை திரை தெளிவாகக் கண்டறிந்து குறிப்பிடப்பட்ட பணியைக் கணினி செய்கிறது.

touch sensitive tablet : தொடு உணர் பலகை : வரைகலை மற்றும் பட வடிவில் உள்ள தரவுகளை எண் வடிவில் கணினி பயன்படுத்தும் வகையில் தரும் உள்ளிட்டுச் சாதனம். விரல் அல்லது எழுத்தாணி மூலம் பலகையைத் தொட்டால் வரைகலை தரவுகளை உருவாக்க முடியும்.

touch tone telephone : தொடு குரல் தொலைபேசி : அழுத்தும் பொத்தான் தொலைபேசி, தொலை செயலாக்க அமைப்புகளில் பயன்படுத்தப்படுவது.

tower : கோபுரம் : அகலத்தை விட அதிகமான உயரம் உடைய தரையில் நிற்கும் பெட்டி. மோட்டோரோலா 68, 000 குடும்ப மையச் செயலகங்களைப் பயன்படுத்தும் என்சி ஆரின் யூனிக்ஸ் சார்ந்த தனி மற்றும் பல் செயலகக் கணினி அமைப்புகளின் கோபுர வரிசை தனியாக நிற்கும் தரையில் வைக்கப்படும். பெட்டியைப் பயன்படுத்தும் தனிநபர் கணினிகளைப் பற்றிய ஒரு பொதுப் பெயர். மேசை இடத்தைக் குறைக்க இத்தகைய வடிவமைப்பு திட்டமிடப்பட்டது.