பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

trash can

1477

tree network


சொடுக்கிட்டுத் திறந்து மீட்க வேண்டிய கோப்பினை குப்பைத் தொட்டி யிலிருந்து இழுத்து வெளியேவிட வேண்டும். குப்பைத் தொட்டியைக் காலியாக்கு (Empty Trash) என்னும் கட்டளை மூலம் அதிலுள்ள கோப்புகளை நிரந்தரமாக நீக்கிவிடலாம்.

trash can : கழிவுக் கலம் : கோப்புகளையும், மடிப்புத் தாள்கள் மற்றும் பயன்பாடுகளையும் நீக்குவதற்கும் நெகிழ்வட்டுகளை வெளியேற்றுவதற்கும் பயன்படும் மெக்கின்டோஷ் உருப்பொருள்.

traverse : பயணித்தல்; ஊடு கடத்தல் : நிரலாக்கத்தில், மரவுரு அல்லது அது போன்ற தரவுக் கட்டமைப்புகளில் அனைத்துக் கணுக்களையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அணுகுவதைக் குறிக்கும்.

trays : இழுப் பறைகள்.

TRC : டீஆர்சி : பட்டி தேடுகுறி : Terminal Reference Character என்பதன் குறும் பெயர்.

tree : மரம் : சுழற்சிகள் இல்லாது இணைக்கப்பட்ட வரை படம். மர வரைபடம் என்றும் அழைக்கப்படுகிறது.

tree diagram : மர வரைபடம்.

tree network : மர பிணையம்;மரக்கட்டமைப்பு : வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின் தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத்தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பகுதியானது கட்டமைப்பின் அடிப்படைக் கட்டுப்பாட்டினைக் குறிப்பிடுகிறது. இடைப்பட்ட கிளைகளில் கீழ்ப்பகுதியில் சில நிலைகளில் கட்டுப்பாடு தரப்படலாம்.


மரபிணையம்