பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

biform

147

big red switch


biform : இரு வடிவம் : எழுத்து வடிவ இயலில், சிறிய எழுத்து மற்றும் சிறிய தலைப்பெழுத்து களைச் சேர்த்து உருவாக்கும் சிறிய எழுத்து அகரவரிசை.

bifurcation : இரண்டாகப் பிரித்தல் ; இருகூறாக்கல் : இரண்டு, இரண்டாக மட்டும் வெளியீடு வருகின்ற சூழ் நிலை. 1 அல்லது 0 உண்மை அல்லது பொய், இயக்கு அல்லது நிறுத்து போன்றவை.

BIGAS : பைகாஸ் : Business International Country Assessment Service என்பதன் குறும்பெயர்.

Big Blue : பிக்புளு : ஐபிஎம் நிறுவனத்தின் இன்னொரு ஒரு வேறுபாடான நீல வண்ணத்தை அதன் கணினிகள் மற்றும் பிற கருவிகளில் அந்த நிறுவனம் பயன்படுத்துவதால் இப் பெயர் ஏற்பட்டது.

Big endian : ஒரு முடிவன் ; பெரு முனையன் : ஒர் எண்ணை பதிவகங்களில் (registers) பதிவுசெய்து வைக்கும் முறை. இம்முறையில் ஒர் எண்ணின் பெருமதிப்புள்ள பைட் (most significant byte), முதலில் இடம் பெறும். (எ-டு) A02B என்ற் பதின் அறும (Hexadecimal) எண் A02B என்று பதியப்படும். சிறு முடிவன் முறையில் 28A0. பெரு முடிவன் முறை மோட்டோரோலா நுண் செயலிகளில் பின்பற்றப்படு கிறது. இன்டெல் நுண்செயலிகள் சிறுமுனைய முறையைப் பயன் படுத்துகின்றன. பெரு முடிவன் என்ற சொல் ஜோனாதன் ஸ்விஃப்ட் எழுதிய கல்லிவர்ஸ் டிராவல்ஸ் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் பெரு முடிவன் என்ற சொல், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கிறது. அக்குழுவினர், முட்டையை உண்ணும்போது அதனைச் சிறுமுனைப் பக்கம் உடைக்க வேண்டும் சட்டத்தை எதிர்ப்பவர்கள்.

big red switch : பெரும் சிவப்பு விசை : கணினியை இயக்க/ நிறுத்த (மின்சாரம் செலுத்த/ நிறுத்த) பயன்படும் விசை, கணினி திடீரென செயல்படா மல் விக்கித்து நிற்கும்போது, கடைசி முயற்சியாக இந்த விசை யைப் பயன்படுத்தி கணினிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கலாம் (Re-booting). ஐபிஎம் பீசி மற்றும் பல கணினிகளிலும் தொடக்க காலங்களில் இந்த விசை பெரிதாக சிவப்பு வண் ணத்தில் இருந்தது. கணினி நடு வில் நின்றுவிடும்போது, இந்த விசையைப் பயன்படுத்தி கணி னிக்குப் புத்துயிர் ஊட்டுவதில் ஒர் ஆபத்தும் உள்ளது. நிலையா