பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trim

1479

troubleshoot


முக்கோணத்தில் அடிப்படை உறவுகளை கோணவியல் பணிகள் என்று அழைக்கப்படு கின்றன. பல நிரல் தொடரமைப்பு மொழிகளில் இவை நூலக வாலாயங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

trim : ஒழுங்கமை.

triple precision : மூன்று துல்லியம்;மும்மை சரிநுட்பம் : கணினி வழக்கமாகப் பயன்படுத்துகின்ற, ஒரு பொருளில் மூன்று மடங்கு எண் களைப் பயன்படுத்தி வைத்திருத்தல்.

tripie twist : மும்முறுக்கு : மேம்பட்ட தெளிவுக்காக படிகங்களை 260 டிகிரிகளில் முறுக்குகின்ற மீ முறுக்கு மாறுபாடு.

tristate logic : மூன்று நிலை தருக்கம்;முன்நிலை தருக்க முறை : ஒருவகை சிறு மின்மப் பெருக்க தருக்க வடிவம். இதில் உள்ளீடு மற்றும் வெளியீடு வேலைகள் மூன்று நிலைகளை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வழக்கமான குறைந்த ஒட்டம் மற்றும் 1, 0 நிலைகளை ஏற்றல். பல மூன்று நிலை தருக்க சாதனங்களுக்கு நேரப்பங்கீட்டு தடயக் கம்பிகளை இது அனுமதிக்கிறது.

tristimulus values : முத் தூண்டல் மதிப்புகள் : பிற நிறங்களை உருவாக்கக் கலக்கப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் ஒவ்வொன்றின் அளவுகள்.

trojan horse : ட்ரோஜன் குதிரை : கணினி கிருமி (virus) களில் ஒரு வகை. கணினி குற்றவாளி ஒருவர் வேறொருவரின் நிரல் தொடரில் நிரலை விட்டு வைப்பார். நிரல் தொடர் வழக்கமானது போலவே செயல்பட்டு நாம் சேமித்து வைத்துள்ள கட்டளைத் தொடர்களையும் தரவுகளையும் பழுதாக்கி விடக் கூடியது.

trol : தூண்டில் செய்தி : ஒரு செய்திக் குழுவில் அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில், சூடான பதிலை எதிர் நோக்கி அஞ்சலிடும் சர்ச்சைக் கிடமான செய்தி. எடுத்துக்காட்டாக, வளர்ப்பு விலங்கு விரும்பிகளின் செய்திக்குழுவில் பூனையைத் துன்புறுத்துவதை நியாயப் படுத்தி ஒரு கட்டுரையை வெளியிடல்.

tron : டிரான் : புகழ்பெற்ற அதிநுட்ப முன் அடைச்சொல்.

troubleshoot : தவறு காணல்;பிழைகள் : கணினி நிரல் தொடரில் உள்ள ஒரு தவறு அல்லது வன்பொருள் அலகில் உள்ள ஒரு கோளாறைக் கண்டறிய முயலுதல்.