பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trouble ticket

1480

true complement


trouble ticket : சிக்கல் சீட்டு : ஒரு குறிப்பிட்ட சாதனம் அல்லது கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல் பணிப்பாய்வு (work flow) செயலாக்கம் மூலமாகக் கண்டறியப்பட்டுத் தரப்படும் அறிக்கை. தொடக்க காலங்களில் இது தாளில் அச்சிடப்பட்டதாய் இருந்தது. இன்றுள்ள பல்வேறு பணிப்பாய்வு மற்றும் உதவி மேசைப் (Help Dest) பயன்பாடுகளில் மின்னணு சிக்கல் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

TRS (Tandy Radio Shack) : டிஆர்எஸ் : Tandy Radio Shack என்பதன் குறும்பெயர். டான்டியின் பீ. சி. களுக்கு கூறப்பட்ட முதல் வணிகப் பெயர். 1977இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று கணினிகளில் ஒன்றாக டீஆர்எஸ் 800 இருந்தது. அதன் செயலாக்க அமைப்பின் பெயர் டீஆர்எஸ் டாஸ் (TRS. DOS).

TRs Dos : டீஆர்எஸ் டாஸ் : Tandy Radio Shack Disk Operating System என்பதன் சுருக்கப் பெயர். டீஆர்எஸ் 80 நுண் கணினிகளின் இயக்க முறைமை.

TRS 80 Microcomputer : டீஆர்எஸ் 80 நுண்கணினி : டான்டி கார்ப்ரேஷனின் ஒரு பிரிவான ரேடியோ ஷாக் நிறுவனம் உற்பத்தி செய்த பல நுண் கணினி அமைப்புகளின் வணிகப்பெயர்.

True Basic : ட்ரூபேசிக் : மூல பேசிக் மொழியை உருவாக்கிய ஜான் கெம்னியும் தாமஸ் குர்ட்ஸும் இணைந்து, பேசிக் மொழியைத் தரப்படுத்தவும், நவீனப்படுத்தவும் 1983ஆம் ஆண்டில் ட்ரூபேசிக் மொழியை உருவாக்கினர். ட்ரூ பேசிக்கில் வரி எண்கள் தேவையில்லை. கட்டமைப்பான (structured), மொழிமாற்றி (compiler) அடிப்படையிலான மொழியாகும். உயர்நிலைக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளை (control structures) கொண்டது. இதனால் கட்டமைப்பு நிரலாக்கம் (structured programming) இயல்வதாகிறது.

true colour : உண்மை நிறம் : 1. 16, 77, 216 நிறங்களை (24 துண்மி நிறம்) உருவாக்கக் கூடிய திறன். 2. ஒளிப் படம் போன்று நிற உருவங்களை உருவாக்கும் திறன். (24 துண்மி நிறம் குறைந்த அளவு தேவைப்படும்).

true complement : உண்மை நிரப்பு எண் : உண்மை நிரப்பு