பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

T. 120 standard

1482

tube store, cathod ray


குரிய தரவரையறைகள். நாவெல் நிறுவனமும் ஏடீ&டீ நிறுவனமும் இணைந்து உருவாக்கியவை. பல்வேறு தொலைபேசிக் கருவி உற்பத்தியாளர்களாலும் மென்பொருள் தயாரிப்பாளர்களாலும் ஆதரிக்கப்படுகிறது.

T. 120 standard : டீ. 120 தர வரையறை : ஒரு கணினிப் பயன்பாட்டுக்குள்ளேயே, கலந்துரையாடல், பலமுனைக் கோப்புப் பரிமாற்றம் போன்ற பல்முனைத் தகவல் தொடர்பு சேவைகளுக்காக பன்னாட்டுத் தொலைத் தகவல் தொடர்பு சங்கம் (ITU) உருவாக்கிய வரன்முறைகள்.

TSR : டீஎஸ்ஆர் : நினைவகத்தில் தங்கிச் செயல்படுதல் என்று பொருள்படும் Terminate and Stay Resident என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு நிரலை இயக்கியவுடன் நினைவகத்தில் சென்று தங்கிவிடும். ஆனால் செயல்படாது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடைபெறும்போது அல்லது வேறொரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும் போது நினைவகத்தில் இருக்கும் நிரலை இயக்கமுடியும். எம்எஸ் டாஸ் போன்ற பல் பணித் திறனற்ற இயக்க முறைமைகளில் இதுபோன்ற நிரல்கள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

. tt : . டீடீ : ஒர் இணைய தள முகவரி டிரினிடாட் டொபேக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

ΤΤFΝ : டீடிஎஃப்என் : இப்போதைக்கு டாட்டா என்று பொருள்படும் Ta Ta for now என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இணையக் கலந்துரையாடல் குழு அல்லது தொடர் அரட்டையில் (IRC) பங்கு பெற்றுள்ள குழுவிலிருந்து தற்காலிகமாக விலகிச் செல்லல். பிறகு வந்து சேர்ந்து கொள்வார்.

TTY : டீடீஒய் : தொலைத் தட்டச்சு (Teletypewriter) என்பதன் சுருக்கம். தொலைபேசி இணைப்பு வழியாக நடைபெறும் குறைந்தவேக தரவு தொடர்புக்கான கருவி. ஒவ்வொரு எழுத்துகளாக உள்ளீடு செய்ய ஒரு விசைப்பலகையும், தொலைவிலிருந்து வரும் தரவுவை ஒவ்வொரு எழுத்தாக அச்சிட அச்சுப்பொறியும் கொண்டது.

tube, cathode : எதிர்மின் குழாய்.

tube store, cathod ray : எதிர் மின் கதிர்க் குழாய் சேமிப்பு.