பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tunnel

1483

Turbo Pascal


tunnel : சுருங்கை வழி : ஒரு நெறிமுறையின்கீழ் உருவாக்கப்பட்ட பொதி அல்லது செய்தியை இன்னொரு நெறிமுறைக்கான பொதியில் சுற்றிவைத்தல். இப்படிச் சுற்றி வைத்த பொதி, மேலுறை நெறிமுறையின் பிணையத்தில் இன்னோர் இடத்துக்கு அனுப்பப்படும். நெறிமுறைக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவே இந்த வகையான பொதிப் பரிமாற்றம் பயன் படுத்தப்படுகிறது.

tunnel diode : ஒத்தியைவு இரு முனையம் : அதிவேக கணினி மின்சுற்று அமைப்பு மற்றும் நினைவகங்களில் பயன்படுத் தப்படும் மின்னணுச் சாதனம். பில்லியன் நொடிகளின் பின்னங்களாலான பொத் தானிடும் வேகம்.

tuple : பண்புக்கூறுத் தொகுதி, கிடக்கை;ஏடு : ஒரு தரவுத் தள அட்டவணையில் தொடர்புடைய, பண்புக் கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி. உறவுநிலைத் தரவு தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது. உறவு நிலையில்லா அட்டவணை கோப்புகளில் ஏடு (Record) என அழைக்கப்படுகிறது.

turbo : டர்போ : அதிவேக செயலாக்கம்/திறம்பட்ட இயக்கத்தைக் குறிப்பிடும் சொல். குறிப்பிட்ட பெயருடைய வன்பொருள், மென்பொருளைக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. பீசி. யில் வேகமான கடிகார விகிதத்தைக் குறிப்பிடுகிறது. போர்லாண்ட் தன்னுடைய டர்போ சி மற்றும் டர்போ பாஸ்கல் ஆகியவற்றில் இதைப் பயன்படுத்தி பிரபலப் படுத்தியது.

turbo C : டர்போ சி : பலதரப் பட்ட வணிகப் பொருள்களை உருவாக்கப் பயன்படும் போர்லாண்ட் நிறுவனத்தின் 'சி' தொகுப்பி. அதன் மிக நன்றாக வடிவமைக்கப்பட்ட பிழை நீக்கி மிகவும் புகழ்பெற்றது.

turbo mouse : டர்போ சுட்டி (மவுஸ்) : கென்சிங்டன் மைக்ரோவேர் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் டிராக்பால். பந்து மெதுவாக நகர்ந்தால், சுட்டி மெதுவாக நகரும். ஆனால் அது வேகமாக நகர்ந்தால் திரையில் சுட்டி அதிக தூரம்போகும். பீசி. யில் அதற்கு இணையானது திறம்பட்ட சுட்டி (expert mouse).

Turbo Pascal : டர்போ பாஸ்கல் : பெரும்பாலான நுண்கணினி