பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

twelve punch

1487

two address computer


twelve punch : பன்னிரண்டு துளை : ஹோலரித்தின் துளையிட்ட அட்டையில் மேல் வரிசையில் உள்ள துளை.

twinaxial : இரட்டை அச்சு : கோ-ஆக்சியல் போன்ற குழாய். ஆனால், இதில் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு உள்கடத்திகள் இருக்கும்.

twin-cable : இரட்டைக் குழாய் : அதே இரண்டு இடங்களுக்கு இடையில் பல இரண்டு கம்பி இணைப்புகள் வேண்டுமென்றால், உள்ளே பல இரட்டைக் கம்பிகளைக் கொண்ட கேபிள் தரப்படும். இதில் இணையாக கம்பிகள் முறுக்கேறும்.

twinkle box : மின்னும் பெட்டி : ஒளி உணர்கருவிகள், லென்ஸ் மற்றும் சுழல்வட்டு ஆகியவற்றைக் கொண்ட உள்ளிட்டுச் சாதனம். முப்பரிமாண நிலையில் உள்ள ஒளி உமிழ் பொருளை அதன் கோண ஒளி அறியும் திறனைக் கொண்டு கண்டறிய முடியும்.

twisted pair : முறுக்கப்பட்ட இணை : 'யுடிபி' (Unshielded Twister pair) என்று அழைக்கப்படும் மெல்லிய (22 முதல் 26 கேஜ்) குறுக்குகளைக் கொண்ட தொலைபேசிக் கம்பிகளில் உள்ள மூடப்பட்ட கம்பி. மற்ற இணைக் கம்பிகளின் குறுக்கீட்டைக் குறைக்க கம்பிகள் ஒன்றோடொன்று முறுக்கப் பட்டிருக்கும். அச்சு இணை (coaxial cable) கம்பிகள் அல்லது ஒளி இழைகளைவிட முறுக்கப்பட்ட கம்பிகளுக்குக் குறைவான பட்டை அகலம் இருக்கும்.

twisted-pair cable : முறுக்கிணை வடம் : இரண்டு தனித்தனி தடுப் புறையிட்ட கம்பிகள் ஒன்றாக முறுக்கப்பட்ட வடம். அருகிலுள்ள வடங்களிலிருந்து வரும் வானலை இடையூறுகளைக் குறைக்க இவ்வடம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டிலொரு கம்பியில் முக்கியமான தரவு சுமந்து செல்லப்படுகிறது. இன்னொரு கம்பி தரைப் படுத்தப்படுகிறது (earthed).

twisted pair wire : முறுக்கிணைக் கம்பி.

twisted wire : முறுக்கிய கம்பி : தரவு தொடர்பு ஊடகம். இணைக் கம்பிகளை ஒன்றாக முக்கிய ஒரு கம்பி வடத்துடன் கட்டப்படுவதாகும்.

two address computer : இரு முகவரிக் கணினி : அதன் நிரல் படிவத்தில் இரண்டு முகவரிகளைப் பயன்படுத்தும் கணினி. சான்றாக, ADD A+B நிரல்