பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

two dimensional

1488

two-tier client/server


என்றால் 'A' வின் மதிப்புகளுடன் 'B' ன் மதிப்புகளும் சேரக்கூடும். இது (B) -ன் பழைய மதிப்பை மாற்றுகிறது.

two dimensional : இரு பரிமாணம் (2D) : வரை கலை தகவலை புலனாகும் தன்மைகளுடன் வழங்குவது. உயரம் மற்றும் அகலம் எவ்வளவு என்று இரண்டு பருப்பொருள் தன்மையும் குறிப்பிடப்படும்.

two dimensional array : இரு பரிமாண வரிசை : பத்திகள் மற்றும் வரிசைகளைக் கொண்ட ஏற்பாடு.

two-dimensional model : இரு பரிமாண மாதிரியம் : நீள, அகலம் கொண்ட பருநிலைப் பொருள்களைக் கணினியில் பாவிப்பது. ஆழம் உருவகப் படுத்தப்படுவதில்லை. x, y-ஆகிய இரு அச்சுகளில் பொருளின் பரி மாணங்கள் குறிக்கப்படும்.

two dimentional storage : இரு பரிமாண சேமிப்பகம்.

two-out-of-five-code : இந்தில் இரண்டு குறிமுறை தரவு பரி மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பிழை உணர்வுமிக்க குறிமுறை. பத்து இலக்கங்கள் (0 முதல் 9 வரை) ஒவ்வொன்றையும் ஐந்து இரும இலக்கங்களால் (0, 1) குறிப்பது. ஐந்து இரும இலக்கங்களில் இரண்டு 1 மூன்று 0 ஆகவோ, இரண்டு 0 மூன்று 1 ஆகவோ இருக்கும்.

two pass : இருமுறை கடத்தல் : தரவுகளை இரண்டுமுறை மாற்ற வேண்டியுள்ள நிரல் தொடர் அல்லது இலக்கம் பற்றியது. முதல் முறை தரவு மூலம் செல்லும்போது அதன் நோக்கத்தை ஒரளவே நிறை வேற்றுகிறது. இரண்டாவது முறை தரவுவை கடக்கும் போதுதான் முழுமையாக நிறைவேற்றுகிறது.

two-planet internet : இருகோள் இணையம்.

two's complement : இரண்டின் நிரப்பு எண் : எதிர்மறை எண்களைக் குறிப்படும்முறை. உடன்பாடு அல்லது எதிர்மறை இருமை எண் ஒன்றை எதிர்க் குறியீடாக மாற்றவேண்டுமானால் எல்லா '0' க்களையும் 1 ஆகவும் எல்லா 1-களையும் 0-வாகவும் மாற்றி பின்னர் 1-ஐக் காட்ட வேண்டும்.

two state devices : இரு நிலைச்சாதனங்கள்.

two-tier clientserver : ஈரடுக்குக் கிளையன்|வழங்கன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டுமானம். இதில் மென்பொருள் அமைப்புகள்

இரண்டு அடுக்கு