பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

billion

148

binary coded character


நினைவகத்தில் (RAM) உள்ள தரவுகள் அழிக்கப்பட்டு விடும். நிலை வட்டும் பழுதுபட வாய்ப்புள்ளது. எனவே தான் இவ்விசையை இறுதி ஆயுத மாகப் பயன்படுத்த வேண்டும்.

bilion : பில்லியன் : ஒராயிரம் மில்லியன் : நூறு கோடி.

bin : கூடை : வெற்றுக் காகிதம் அல்லது முன்பே அச்சடிக்கப் பட்ட படிவங்களைப் படித்துக் கொள்ள அச்சுப்பொறியில் உள்ள ஒரு தட்டு. முடிந்த வேலையை வாங்கிக் கொள்வதற்கும் கூடை பயன்படுத்தப்படலாம். நிலை வட்டில் பலவகைப் பொருளுக் கான பட்டியல் செயலாக்க அமைப்பு மற்றும் சேவை நிரல் கள் இதில் இடம் பெறும்.

BINAC : பினாக் : Binary Automatic Computer என்ற கணினியின் குறும் பெயர். 1949ஆம் ஆண்டு எக்கார்த் மாக்லி நிறுவனம் உருவாக்கியது.

binaries : இரும மொழி நிரல்கள் : எந்திர மொழியில் இயங்கக் கூடிய நிரல்கள்.

binary : இருமம் : 2-ஐ அடிப் படையாகக் கொண்ட முறை இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ள ஒரு சூழ்நிலை.

binary arithmetic : இருமக் கணக்கு; இருமக் கணக்கீடு; ஈரிலக்கக் கணக்கு : 1. பதின்ம எண் முறைக்குச் கணக்கீட்டு முறை. ஆனால், இதில் 0, 1 ஆகிய இரண்டு இலக் கங்கள் மட்டுமே பயன்படுத் தப்படுகின்றன. 2. ஒரே நேரத் தில் இரண்டு மதிப்புகளை மட்டுமே வைத்து எல்லா கணக்குகளும் செய்யப்படு வதைக் குறித்தல்.

binary arithmetic operation : இரும பூலியன் செயற்பாடு.

binary boolian operation : இருமக் கணக்கீட்டுச் செயல்பாடு.

binary card : இரும எண் அட்டை : தரமான துளைஅட்டை 0 அல்லது 1-ஐக் குறிப்பிட 12 வரிசைகளில் 80 பத்திகளில் 960 துளையிடும் இடங்களைக் கொண்டது.

binary chop : இரும வெட்டு.

binary code : இருமக் குறி முறை : ஈரிலக்கக் குறியீடு : எந்தத் தகவலையும் துண்மிகள் 0 அல்லது 1 இன் மூலமே குறியீடு செய்யும் குறியீட்டு முறை BASCII மற்றும் EBCDIC போன்ற இரண்டு முறைகளில் இவை பயன்படுத் தப்படுகின்றன. 0 என்றால் நிறுத்து. 1 என்பது இயக்கு.

binary coded character : இருமக் குறியீட்டு எழுத்து : எண்