பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

type-ahead capability

1490

type declaration


பலகையில் உள்ள விசைகளை அழுத்துதல். 2. நிரல் தொடரமைவில், அதனுள் சேமிக்கப்பட்ட தரவுகளினால் முடிவு செய்யப்படும் மாறிலி வகை. சான்றாக, முழு எண், மிதக்கும் புள்ளி, தருக்க சரம், தரவு, இருமை ஆகியவை பொது தரவு வகைகளாக இருக்கும். 3. டாஸ் மற்றும் ஓஸ்/2 இல் சொல் தொகுப்புக் கோப்பின் உள்ளடக்கங்களைக் காட்டும் கட்டளை.

type-ahead capability : தொடர் தட்டச்சுத் திறன் : விசைப் பலகையில் தட்டச்சு செய்யும் விசையழுத்தங்களை இடை நிலை நினைவகத்தில் (Buffer Memory) சேமித்து வைத்துப் பிறகு திரையில் காட்டும் திறனுள்ள ஒரு கணினி நிரல். பயனாளர் வேகமாகத் தட்டச்சு செய்தால், அந்த வேகத்தில் எழுத்துகளைத் திரையில் காட்ட முடியாதபோது சில விசையழுத்தங்களை இழக்க நேரலாம். இப்படி நிகழ்வதைத் தவிர்க்கவே இடைநிலை நினைவகத்தில் உள்ளீடுகள் சேமிக்கப்படுகின்றன.

type ball : தட்டச்சுப் பந்து;அச்சுப் பந்து : பயன்படுத்தக் கூடிய எல்லா எழுத்துகளையும் கோல்ஃப் பந்துபோலத் தோற்றமளிக்கச் செய்யும் தட்டச்சு அடிக்கும் தன்மை. உயர்த்தப்பட்டுள்ள எழுத்துகளை சுற்றிலும் நகர்த்தக்கூடிய அச்சில் ஏற்றி வைக்கும். சுத்தியல்போல இயங்கி, காகிதத்தில் நாடாவை அழுத்தி எழுத்து உருவத்தை உருவாக்குகிறது.

அச்சுப் பந்து

type casting : இனமாற்றம்;வகை மாற்றம் : ஒரு தரவின மதிப்பை வேறொரு தரவினமாக மாற்றுதல் (எ. டு) மெய்யெண் இனமதிப்பை முழு எண் மதிப்பாக மாற்றுதல்.

type declaration : இன அறிவிப்பு : பல நிரலாக்க மொழிகளில் பயனாளர் தாம் விரும்பும் தரவினங்களை உருவாக்கிக் கொள்ள வசதி உள்ளது. ஏற்கெனவே இருக்கும் மூலத் தரவினங்கள் சிலவற்றை ஒருங்கிணைத்து புதிய தர