பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uid

1494

ultra-large-scale



Less) நெறிமுறை ஆகும் இது. ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கில் போக்குவரத்து அடுக்கில் செயல்படுகிறது. யுடிபி, ஒரு பயன்பாடு தருகின்ற தரவு செய்திகளை, பொதிகளாக்கி ஐபி மூலமாக அனுப்பிவைக்கும். ஆனால், பொதிகள் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தனவா என்பதைச் சரிபார்க்காது. எனவே யுடிபி, டீசிபி-யை விட வேகமானது, திறன்மிக்கது. இதன் காரணமாக, எஸ்என் எம்பி உட்பட பல்வேறு நோக்கங்களுக்கு யுடிபீ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் நம்பகத்தன்மை செய்தியை உருவாக்கும் பயன்பாட்டைப் பொறுத்திருக்கிறது.

uid : பயனாளர் அடையாளப் பெயர்/ எண்.

. uk : . யுகே : ஒர் இணைய தள முகவரி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

uknet : யுகேநெட் : 1. கென்டக்கிப் பல்கலைக் கழக வளாகப் பிணையம். 2. இங்கிலாந்து நாட்டில், கென்ட் பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஒர் இணையச் சேவை நிறுவனம்.

ՍԼՏI : யுஎல்எஸ்ஐ (மிகப் பெரும் ஒருங்கிணைப்பு) : Ultra Large Scale Integration என்பதன் குறும்பெயர். Super large scale integration போன்றதே இதுவும்.

ultra DMA/33 : அதிவேக டிஎம்ஏ/33 : நேரடி நினைவக அணுகலை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற நெறிமுறை. ஏற்கெனவே உள்ள ஏடீஏ/ஐடிஇ நெறிமுறையைவிடச் செயல்திறன் மிக்கது. வெடிப்புப் பரிமாற்ற வீதம் (Burst Transfer Rate) இருமடங்கு ஆகும். வினாடிக்கு 33 மெகா பைட்வரை அனுப்பும் திறன் வாய்ந்தது. தரவு பரிமாற்ற நம்பகத் தன்மையையும் அதிகமாக்கியுள்ளது.

ultrafiche : மீ நுண்படலம் : நூறு மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் உருவம் குறைக்கப்பட்ட நுண்படலம்.

ultra high frequency : மீஉயர் அலைவரிசை.

ultra-large-scale integration : மீப்பெருமளவு ஒருங்கிணைப்பு : ஒருங்கிணைப்பு மின்சுற்று உருவாக்கத்தில் ஒருவகை. மின்மப் பெருக்கி மற்றும் பிற பொருள் கூறுகளை மிக அடர்த்தியாகப்