பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unbundled

1496

undeliverable



போன்றவற்றைத் தனித்தனியே விற்பனை செய்தல்.

unbundled : கட்டி அனுப்பாத  : வன்பொருள் உற்பத்தியாளர்கள் கணினி வன்பொருள் விற்கும் போது தராமல் தனியாக விற்கும் மென்பொருள், பயிற்சி மற்றும் பணிகள் பற்றியது.

unbundling : கட்டப்படாத : வன்பொருள், மென்பொருள் மற்றும் பிற தொடர்புள்ள பணிகளைத் தனியாக விலை குறித்தல்.

uncommitted logic array : உறுதிப்படாத தருக்க வரிசை : ஒரு வகையான நிரல் தொடரமைக்கக்கூடிய தருக்கப் பகுதி.

uncompress : விரித்துப் பெருக்குதல் : இறுக்கிச் சுருக்கப்பட்ட (compressed) கோப்பினை விரித்துப் பெருக்கி மூலக் கோப்பினைப் பெறுதல்.

unconditional branch : நிபந்தனையற்ற கிளை : நிரல் தொடரமைத்தலில், GOTO, BRANCH, JUMP போன்ற நிரல். இந்த நிரல், கட்டுப்பாட்டினை நிரல் தொடரின் வேறு ஒரு பகுதிக்கு அனுப்புகிறது.

unconditional branching : நிபந்தனையிலா கிளைத்தல் : நிபந்தனையின்றிப் பிரிதல்.

unconditional branch instruction : நிபந்தனையற்ற கிளைபிரி நிரல்.

unconditional transfer : நிபந்தனையற்ற மாற்றல் : நிரல் தொடர் கட்டுப்பாட்டின்போது வழக்கமான வரிசையில் இயக்கப்படாமல், அதிலிருந்து பிரிந்துபோகச் செய்யும் ஒரு நிரல்.

uncontrolled loop : கட்டுப்படுத்தப்படாத கண்ணி : தருக்க இறுதியை அடையாத நிரல் தொடர் கணினி.

undefined : வரையறுக்கப்படாத : நிரல் தொடரில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு தரவு வகை அல்லது குறிப்பிட்ட நீளம் தரப்படாத நிலையெண் அல்லது மாறிலியைக் குறிப்பிடல்.

undefined variable : வரையறுக்கப்படாத மாறிலி.

undelete : அன்டிலெட் ; மீட்டெடு : நீக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் கொண்டு வரும் டாஸ் (DOS) கட்டளை கோப்புகளை நீக்கிய பிறகு அதன் மீது எழுதப்படாவிட்டால் மட்டுமே இது செயல்படும்.

undeliverable : சேர்ப்பிக்க முடியாத வினியோகிக்க முடியாத : தகவலைப் பெறவேண்டியவரிடம் சேர்ப்பிக்க முடியாத