பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

binary coded decimal

149

binary compatible


குறியீட்டு முறையில் ஒன்று. இதில் பதின்ம இலக்கங்கள், எழுத்துகள், சிறப்புக் குறியீடுகள் ஆகியவை, ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட, தொடர்ச்சியான இரும இலக்கங்களினால் குறிப்பிடப்படும் எழுத்து என் கொண்ட குறிகளைக் குறிப்பிடுகிறது.

binary coded decimal; (BCD) : இருமக் குறி முறைப் பதின்மம் : பிசிடி : ஒரு வகை யான கணினி குறி யீட்டு முறை. இதில் ஒவ்வொரு பதின்ம இலக்கமும் 1-க்கள் 0-க்கள் கொண்ட நான்கு இலக்கத் தொகுதியால் குறிப்பிடப்படுகின்றன.

binary coded decimal inter change code : இருமக் குறி முறைப் பதின்ம மாற்றக் குறி முறை : 6 எழுத்து மாற்ற வசதி கொண்ட 6 துண்மி உள்ளிட்டுக் குறி முறை.

binary coded decimal notation : இருமக் குறியீட்டு பதின்மக் குறி.

                      7   5   2   1   3
                  0111 0101 0010 0001 0011
                  இருமக் குறியீட்டு பதின்ம எண்

binary coded decimal number : இருமக் குறிமுறை பதின்ம எண் : நான்கு எண்களைக் கொண்ட தொடர்ச்சியான இரும எண் தொகுதிகள். பதின்ம எண்ணில் குறிப்பிடப்படும் மதிப்புக்குச் சமமானது என்று குறிப்பிட முடியாது. ஆனால் பதின்மான எண்ணுக்கு ஒவ்வொன்றுக்கும் இரும முறை எண் உண்டு. எடுத்துக் காட்டாக 264-க்கு இரும எண் 0010 0110 0100.

binary coded decimal representation : இருமக் குறியீட்டு பதின்ம உருவகிப்பு

binary coded digit : இருமக் குறியீட்டு இலக்கம்.

binary coded octal : இருமக் குறி முறை எண்மம் : 3 துண்மிகள் தொகுதியில் எட்டிலக்க அல்லது எண்ம இலக்கங்களைச் சேமித்தல்.

binary compatible : இரும ஒத்தியல்பு; இரும தகவமைவு :