பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unicode

1499

Uniform Naming



அமைப்பு. மையச் செயலகத்தின் உள்நினைவகத்திற்கும் வெளிப்புறப் பகுதிகளுக்கும் இடையில் பங்கிட்டுக் கொள்வது.

unicode : யுனிகோடு : 1988-1991 காலகட்டத்தில் யுனிகோடு கூட்டமைப்பு உருவாக்கிய 16 பிட் எழுத்துக் குறியாக்கத் தர வரையறை. ஒர் எழுத்தைக் குறிக்க இரண்டு பைட்டுகள் பயன்படுவதால் மொத்தம் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட (216) எழுத்துகளைப் பெறமுடியும். எனவே யுனிகோடில் உலகத்திலுள்ள வரிவடிவம் கொண்ட அனைத்து மொழி எழுத்துத் தொகுதிகளையும் பெற முடியும். ஆனால் 1-பைட் எழுத்துக் குறி முறையான ஆஸ்க்கியில் 256 எழுத்துகள் மட்டுமே இயலும். ஆஸ்க்கியின் 256 எழுத்துகளும் யுனிக் கோடின் முதல் 256 இடங்களில் இருத்தப்பட்டுள்ளன. 39, 000 இடங்கள் பல்வேறு மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 21000 இடங்கள் பண்டைச் சீன வரி வடிவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியிடங்கள் வருங்கால விரிவாக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு 128 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான இடங்கள் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

unicorn : யுனிகார்ன் : வீட்டு நுண் கணினி, கல்வி மற்றும் வீட்டு கணிப்புக்கு மிகவும் புகழ்பெற்றது. 64கே நினைவகத்துடன் வரும் 65028 துண்மி சார்ந்தது. பி. பி. அக்கரன் (Acron) உடன் ஏற்புடையது. ஐபிஎம் பீசி மிகவும் புகழ் பெறவும், விலைகள் குறையவும் யூனி கார்னும் தன் புகழை இழந்தது.

unidirectional : ஒரே திசையிலான : ஒரு வழித்தடத்தில் தரவுகள் ஒரே ஒரு திசையில் மட்டும் அனுப்புவது.

unidirectional printing : ஒரே திசையிலான அச்சிடல் : ஒரே திசையில் மட்டும் அச்சிடல். இரு திசையில் அச்சிடுவதற்குப் பதிலாக துல்லியமாக செங்குத்து அமைப்பில் அச்சிடுகிறது.

Uniform Naming Convention : ஒரு சீரான பெயரிடு மரபு : பிணையத்தில், கோப்புகளுக்குப் பெயரிடுவதில் பின்பற்றப்படும் நடைமுறை. பிணையத்திலுள்ள பிற கணினிகள் ஒரு குறிப்பிட்ட கோப்பினைக் கையாள நேரும்போது குழப்பமில்லாமல் அதே பெயரை அதே பாதையுடன் அணுக வழியேற்படும்.