பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unit, logical

1502

Universal Product Code



unit, logical : தருக்கமுறை அலகு.

unit position : புல நிலை; ஒன்றின் நிலை : எண் புலத்தில் வலது இறுதி நிலை.

unit record : பதிவேடு அலகு : தரவுகளால் குறியீடு செய்யப்பட்டு கணினி உள்ளீடாகப் பயன்படுத்தப்படும் துளையிட்ட அட்டை.

unit record system : அலகு பதிவு அமைப்பு : தானியங்கி கணினிமய அமைப்புக்கு மாறாக தொழில் நுட்பாளர்கள் இயக்கும் பிரிப்பிகள், அடுக்கிகள் போன்ற மின்னியந்திர செயலாக்க எந்திரங்களைப் பயன்படுத்தும் தரவு செயலாக்க அமைப்பு. அலகு பதிவு அமைப்புகளெல்லாம் நவீன கணினிக் கருவிகளால் மாற்ற பட்டுவிட்டன.

unit, tape : நாடா அலகு; நாடா அகம்.

unit, visual display : புலன் காட்சி அலகு.

UNIVAC I : யூனிவாக் I : 1951இல் செய்து முடிக்கப்பட்ட வணிக வகையிலான முதல் மின்னணு எண்முறைக் கணினி. 1950ஆம் ஆண்டின் (அமெரிக்க) மக்கள் தொகைக் கணக்குத் தொடர்பான தரவுகள் சிலவற்றைத் தொகுக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலகம் இதைப் பயன்படுத்தியது. இத்தகைய கணினிகள் 48 செய்யப்பட்டன.

universal asynchronous receiver/ transmitter : யுனிவர்சல் அசிங்க்ரனஸ் ரிசீவர்/டிரான்ஸ்மிட்டர் : தொடர் தரவுகளைப் பெற்று அவற்றை அனுப்புவதற்கான இணை வடிவமாக மாற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுச் சாதனம். இது தலைகீழாகவும் செய்யப்படும்.

universal indentifier : உலக அடையாளம் காட்டி : ஒருவரது அடையாளத்தை சோதித்தறிவதற்காக ஒரு நபருக்குத் தரப்படும் பல்லுரிமை தர எண்.

universal language : உலக மொழி : பல கணினிகளில் கிடைக்கக்கூடிய ஃபோர்ட்ரான், கோபால் மற்றும் பேசிக் போன்ற ஏதாவதொரு நிரல் தொடரமைக்கும் மொழி. பொது மொழி போன்றது.

Universal Product Code (UPC) : உலக உற்பத்திக் குறியீடு : பேரங்காடித் தொழிலில் உருவாக்கப்படும் கணினி படிக்கக் கூடிய பத்து இலக்க கணினிக் குறியீடு. பொருள் மேலுள்ள வில்லையின் மூலம் உற்பத்தி